பக்கம் எண் :

நான்காவது முல்லை635

பாக்களும் "மலர்மலி புகலெழ 1வலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ" என அறுசீரடி முடுகியலோடு தொடர்ந்த வெண்பாவும் இருசீர்ச்சின்னமும் பெற்றுக் கலிவெண்பாவுறுப்பில் வேறுபட்டு வந்த (1) கொச்சகக்கலி. (2)

(103). மெல்லிணர்க் கொன்றையு மென்மலர்க் காயாவும்
புல்லிலை வெட்சியும் பிடவுந் தளவுங்
குல்லையுங் குருந்துங் கோடலும் பாங்கருங் 
கல்லவுங் கடத்தவுங் கமழ்கண்ணி மலைந்தனர்
5 பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்மார்
முல்லை முகையு முருந்து நிரைத்தன்ன
பல்லர் பெருமழைக் கண்ணர் மடஞ்சேர்ந்த
சொல்லர் சுடருங் கனங்குழைக் காதினர்
நல்லவர் கொண்டார் மிடை;
10 அவர்மிடை கொள;
மணிவரை மருங்கி னருவி போல
வணிவரம் பறுத்த வெண்காற் காரியு
மீன்பூத் தவிர்வரு மந்திவான் விசும்புபோல்
வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையுங்
15 கொலைவன் சூடிய குழவித் திங்கள்போல்
வளையுபு மலிந்த கோடணி சேயும்
பொருமுரண் முன்பிற் புகலேறு பலபெய்
தரிமாவும் பரிமாவுங் களிறுங் கராமும்
பெருமலை விடரகத் தொருங்குடன் குழீஇப்

1. இச்செய்யுளை அம்போதரங்கஒருபோகென்று கூறி, "கண்ணகன்................. ளின்று" இது தரவு. "ஓஒஇவள்...........தகைத்து" இவை கொச்சகம். "தகைவகை................மேல்" இவை அராகம். "எழுந்தது...........பலர்" இவை சிற்றெண். "அவருள்.........வேறு" இது முடுகியலடிவந்த கொச்சகம். "ஏறெவ்வம்.................சாற்றுவார்" இவையுங் கொச்சகம். "ஆங்கு" தனிச்சொல். "தண்ணுமை..........துரை" இது சுரிதகம்." என்று பிரித்துக்காட்டி, தரவு, கொச்சகம், அராகம், சிற்றெண், சுரிதகமென்னும் ஐந்துறுப்பும் முறையானே வருதலின்றிச் சில மீள வந்தன என்பர். இளம்பூரணர்; தொல். செய். சூ. 145. 'எருத்தே கொச்சகம்".

(பிரதிபேதம்)1அலர்மலி மணிபுரை நிமிர்தோள் மிணடுமென அறுசீரடி.