20 | படுமழை யாடும் வரையகம் போலுங் கொடிநறை சூழ்ந்த தொழூஉ; |
22 | தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின வேறு; |
24 | ஏற்றின், அரிபரி பறுப்பன சுற்றி யெரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்க ணுருவ மாலை போலக் குருதிக் கோட்டொடு குடர் வலந்தன; |
28 | கோட்டொடு சுற்றிக் குடர்வலந்த வேற்றின்முன் னாடிநின் றக்குடர் வாங்குவான் பீடுகாண் செந்நூற் கழயொருவன் கைப்பற்ற வந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம்; |
32 | இகுளை யிஃதொன்று கண்டை யிஃதொத்தன் கோட்டினத் தாயர் மகனன்றே மீட்டொரான் போர்புக லேற்றுப் பிணரெருத்திற் றத்துபு தார்போற் றழீஇ யவன்; |
36 | இகுளை யிஃதொன்று கண்டை யிஃதொத்தன் கோவினத் தாயர் மகனன்றே யோவான் மறையேற்றின் மேலிருந் தாடித் துறையம்பி யூர்வான்போற் றோன்று மவன்; |
40 | தொழீஇஇ, காற்றுப்போல் வந்த கதழ்விடைக்காரியை யூற்றுக் களத்தே யடங்கக்கொண் டட்டதன் மேற்றோன்றி நின்ற பொதுவன் றகைகண்டை யேற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டுச் சீற்றமோ டாருயிர் கொண்டஞான் றின்னன்கொல் கூற்றென வுட்கிற்றென் னெஞ்சு; |
46 | இகுளை யிஃதொன்று கண்டை யிஃதொத்தன் புல்லினத் தாயர் மகனன்றே புள்ளி வெறுத்த வயவெள்ளேற் றம்புடைத் திங்கண் மறுப்போற் பொருந்தி யவன்; |