பக்கம் எண் :

நான்காவது முல்லை637

50ஓவா வேகமோ டுருத்துத்தன் மேற்சென்ற
சேஎச் செவிமுதற் கொண்டு பெயர்த்தொற்றுங்
காயாம் பூங்கண்ணிப் பொதுவன் றகைகண்டை
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய்பகுத் திட்டுப் புடைத்தஞான் றின்னன்கொன்
மாயோனென் றுட்கிற்றென் னெஞ்சு;
56ஆங்கு, இரும்புலித் தொழுதியும் பெருங்களிற் றினமு
மாறுமா றுழக்கியாங் குழக்கிப் பொதுவரு
மேறுகொண் டொருங்குதொழூஉ விட்டனர் விட்டாங்கே
மயிலெருத் துறழணி மணிநிலத்துப் பிறழப்
பயிலிதழ் மலருண்கண்
மாதர் மகளிரு மைந்தரு மைந்துற்றுத்
தாதெரு மன்றத் தயர்வர் தழூஉ;
63கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே யாய மகள்;
65அஞ்சார் கொலையேறு கொள்பவ ரல்லதை
நெஞ்சிலார் தோய்தற் கரிய வுயிர்துறந்து
நைவாரா வாயமக டோள்;
68வளியா வறியா வுயிர்காவல் கொண்டு
நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற்
கெளியவோ வாயமக டோள்;
71விலைவேண்டா ரெம்மினத் தாயர் மகளிர்
கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின்
முலையிடைப் போலப் புகின்;
74ஆங்கு;
குரவை தழீஇயா மரபுளி பாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுது
மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொன்னில
மாளுங் கிழமையொடு புணர்ந்த
வெங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே.