பக்கம் எண் :

638கலித்தொகை

1இஃது ஆயர் ஏறுதழுவிநின்றமையைத் 2தோழி தலைவிக்குத் தனித் தனியே காட்டிப் பின்னர் அவர் ஏறுதழுவிவிட்டுக் குரவையாடுகின்றமையுங் கூறி ஆண்டு யாமுஞ்சென்று நின்னை ஏறுதழுவிக் 3கோடற்கு நிற்கின்ற தலைவன் கேட்டு ஏறுதழுவிக்கொள்ளுமாறு நமக்குச் சுற்றத்தார் கூறிக் கிடக்கின்ற முறைமையைப் பாட்டிலே தோன்றப் பாடிக் குரவையாடி வழுதி வாழ்கவென்று தெய்வம்பராவுதும்; நீயும் அங்ஙனம் பாடுதற்குப் போதுவாயாக வெனக் கூறியது.

இதன் பொருள்.

(1)மெல்லிணர்க் (2) கொன்றையு மென்மலர்க் காயாவும்
புல்லிலை வெட்சியும் (3) பிடவுந் தளவுங்
குல்லையுங் 4குருந்துங் (4) கோடலும் (5) பாங்கருங்
கல்லவுங் கடத்தவுங் கமழ்கண்ணி மலைந்தனர்
5பல்லான் 5பொதுவர் கதழ்விடை கோட்காண்மார்
(6) முல்லை முகையு முருந்து நிரைத்தன்ன
பல்லர் பெருமழைக் கண்ணர் மடஞ்சேர்ந்த

1. தரவு ஈற்றடி குறைந்து வருதலையு முடைத்தென்பதற்கு "மெல் லிணர்க்.................மிடை" என்பது மேற். தொல். செய். சூ. 116. நச்.

2. "அவிழ்தளவி னகன்றோன்றி, நகுமுல்லை யுகுதேறுவீப், பொற்கொன்றை மணிக்காயா, நற்புறவி னடைமுனையின்" பொருந. 199 - 202. என்பதனாலும் முல்லைநிலத்துவாழ்வார் பலமலர் சூடு மியல்பினர் என்பது அறியலாகும்.

3. "பிடாவுந் தளாவும்" தொல். உயிர்மயங்கு. சூ. 27.

4. இந்நூற் பக்கம் 619 : 6-ஆம் குறிப்புப் பார்க்க.

5. (அ) "பாங்கரு, முல்லையுந் தாய பாட்டங்கால்" (கலி. 111 : 3 - 4.) என்பதனால் பாங்கர், ஒரு பூங்கொடியென்று தோற்றுகிறது. (ஆ) "வண்டு பாடு பாங்கரோடு" சூளா. சீயவதைப். 219. (இ) "குருந்து பொற் கூவிளம் குல்லை பாங்கரும்" காஞ்சிப். கழுவாய்ப். 153. (ஈ) "வகுள ஞெமையரை பாங்கர்" திருவானைக்காப். சம்புமுனி. 1. (உ) "சூத நாகம்வழை பாங்கர் குருந்து" விநாயக. கெசானனர் திருவவ. 59. என இது பயின்றுவருதலும்காண்க. பாங்கரென்பதை ஓமையென்பாருமுளர். அஃது ஒரு மரமென்று தெரிகிறது.

6. (அ) "முல்லை முகையு முருந்து நிரைத்தன்ன, பல்லும்" கலி. 108 : 15 - 16. (ஆ) "முருந்தொடு முல்லைசாய்த்த முகிழ்நகை யாயர்மாதர்" பாக. (10) வேய்ங்குழல். 19. (இ) ''முல்லையு முருந்து நிரைத்தன

(பிரதிபேதம்)1இது ஆயர், 2தோழியொரு தலைவிக்கு, 3கொண்டற்கு, 4குருந்துகோடலும், 5பொதுவாததழ் விடைக்கோட் காண்குவார்.