பக்கம் எண் :

நான்காவது முல்லை639

சொல்லர் சுடருங் (1) கனங்குழைக் காதினர்
நல்லவர் கொண்டார் மிடை

எ - து : பலபசுவையுடைய பொதுவர் கல்லிடத்தனவுங் காட்டிடத்தனவு மாகிய மெல்லியகொத்தினையுடைய (2) கொன்றைப்பூவாலும் மெல்லியமலரை யுடைய காயாம்பூவாலும் புல்லியஇலையையுடைய வெட்சிப்பூவாலும் பிடவம் பூவாலும் முல்லைப்பூவாலும் (3) கஞ்சங்குல்லைப் பூவாலும் குருந்தம்பூவாலும் கோடற்பூவாலும் 1பாங்கர்ப்பூவாலுஞ்செய்த கமழுங்கண்ணியைச் சூடினராய் விரைந்த ஏற்றைத்தழுவுதலைக்காணவேண்டிமுல்லைமுகையும் (4) பீலிமுருந்தும் நிரைத்தாலொத்த பல்லினையுடையராய்ப் பெரிய குளிர்ச்சியையுடைத்தாகிய கண்ணினையுடையராய் மடப்பம் பொருந்தின சொல்லினையுடையராய் விளங்கும் பொன்னாற்செய்த மகரக்குழையையணிந்த காதினராய் ஆயர்மகளிர் வந்து பரணைக் கைக்கொண்டார். எ - று.

மிடை - பரண்.

10அவர்மிடைகொள,
(5) மணிவரை மருங்கி னருவி போல
வணிவரம் பறுத்த வெண்காற் காரியு
மீன்பூத் தவிர்வரு மந்திவான் விசும்புபோல்
வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையுங

போன்று..........................நகைக்குமென் னகையாள்'' சீறா. நுபுவ்வத்துக். தசைக்கட்டியை. 23.

1. இந்நூற்பக்கம் 402 : 1-ஆம் குறிப்புப் பார்க்க.

2. (அ) "மன்றலங் கொன்றை மலர்மலைந்து ஃஃஃ, என்று திரியு மிடை மகனே" எனவும், (ஆ) "மணிநிரை யோம்பி நேரும் வல்விடை தழுவித் தோய்ந்த, வணிநிரை மகளிர் கூந்த லலங்கலங் கொன்றை சூட்டிப், பிணிதபு மாயர்செய்கை" எனவும், (இ) "வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக், கொன்றையம் பூங்குழ லாள்" எனவும் வருஞ் செய்யுட்களை நோக்குக.

3. கஞ்சங் குல்லை - கஞ்சா; இச்சொல், கஞ்சம், குல்லையென இரண் டாகவும் கொள்ளப்படும்.

4. பீலிமுருந்து - மயிலிறகின் அடி.

5. (அ) "மணிவரை யிழிதரு மணிகிள ரருவி" தொல். செய். சூ. 78. பேர். மேற்கோள். (ஆ) மணிவரை யென்பதற்கு, இங்கே எழுதியிருக்கும் பொருளோடு "மணிதிகழ் விறன்மலை" (கலி. 20 : 5) என்பதும் இந்நூற் பக்கம் 246 : 4-ஆம். குறிப்பில் பொருந்துவனவும் ஒப்பு நோக்கற்பாலன.

(பிரதிபேதம்) 1 பாங்கற்பூவாலும்.