பக்கம் எண் :

640கலித்தொகை

15(1) கொலைவன் சூடிய (2) குழவித் திங்கள்போல்
1 வளையுபு மலிந்த கோடணி சேயும்
பொருமுரண் முன்பிற் (3) புகலேறு பலபெய்
தரிமாவும் பரிமாவுங் களிறுங் கராமும்
(4) பெருமலை விடரகத் தொருங்குடன் குழீஇப்
20(5) படு (6) மழை யாடும் வரையகம் போலுங்
கொடிநறை சூழ்ந்த தொழூஉ

எ - து : அவர் தத்தம்மிடையைக் கைக்கொள்ள ஆயர் (7) மணிகளை யுடைய (8) மலையிடத்தினின்றும் வீழ்கின்ற அருவிகள்போல அழகினது எல்லையைப்


1. "ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை, மாற்றருங் கணிச்சி மணி மிடற்றோனும்.........நால்வ ருள்ளுங்,
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்" புறம். 56 : 1 - 11. என்புழி 'மணிமிடற்றோனைக் கூற்றமென்றது அழித்தற்றொழிலுடைமையான்' என்னும்விசேடவுரைப் பொருளாட்சியும், "கொலைவன் யார்கொலோ கொலைவன்மற்றிவன்" புறம். 152 : 8. "கொலைவனல்லையோ கொற்றவ னாயினை" மணி. 25. 174. என்னும் சொல்லாட்சியும் ஈண்டு அறிதற் பாலன.

2. குழவி யென்பது சூத்திரத்துக் கூறப்படாத பிறிதின்மேலும் வருமென் பதற்கு, "குழவித் திங்கள்" என்பது மேற்கோள்; தொல். மர. சூ. 24. பேர்; மயிலைநாதர் குழவியென்பது மதிக்கும் உரித்தாய்வருமரபிற்றென்று எழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலது; நன். பொது. சூ. 37.

3. "போர்புக லேற்றுப் பிணரெருத்தில்" கலி. 103 : 34.

4. (அ) "பெருமலை விடரகத்து" (ஆ) "பெருமலை விடரகத் தருமிசை" புறம். 37 : 4 ; 91 : 8.

5. படுதல் என்பது பெய்தல் என்னும் பொருளில் வருதல், (அ) "படுமழை யடுக்கத்த" (ஆ) "பாடுபெயல்" கலி. 48 : 4; 90 : 6. என்பவற்றாலும் 'பாட்டம்' என இருவகைவழக்கினும்வழங்கும் சொல்லாலும் அறியலாகும்.

6. "ஊர்பெழு கிளர்புளர் புயர்மங்குலி னறைபொங்க" கலி. 105 : 25.

7. மணிவரை என்பதற்கு நீலமணி போன்றமலை யெனப் பொருள் கொள்ளினும் பொருந்தும்.

8. (அ) "அயமிழி யருவிய வணிமலை" (ஆ) "இலங்குதா ழருவியோ டணிகொண்ட நின்மலை" (இ) "ஆமிழி யணிமலை" (ஈ) "அயனந்தியணிபெற வருவியார்த் திழிதரும், பயமழை தலைஇய

(பிரதிபேதம்)1வளைபுமலிந்த.