பக்கம் எண் :

நான்காவது முல்லை641

1போக்கின வெள்ளிய கால்களையுடைய காரியாகிய ஏற்றினையும் மீன் பொலிவு பெற்று விளங்குதல்வரும் அந்திக்காலத்து மேகத்தையுடைய சிவந்த ஆகாயம்போலே அழகிய ஒளிபரந்த புள்ளிகள் வெள்ளையாயிருக்கின்ற சிவந்த ஏற்றையும் கொலைத் தொழிலையுடைய இறைவன் சூடிய இளையதாகிய திங்களைப்போல வளைந்து நிறைந்த கொம்பை அணிந்த சிவந்த ஏற்றையும் பொருகின்ற 2மாறுபாட்டினையும் வலியினையுமுடைய கொண்டாடுகின்ற பிற ஏறுகள் பலவற்றையும் தொழுவினுள்ளே விடுகையினாலே ஒழுங்குபட்ட புகை சூழ்ந்த அத்தொழு, சிங்கமாகிய மாவும் குதிரையாகிய மாவும் களிறுகளும் (1) முதலையிலொருசாதியாகிய கராமும் பெரிய மலையின் முழையிடத் திலே சேரத் திரளப்பட்டுப் பெய்கின்ற மழை ஒருங்குதிரியும் மலையிடத்தை யொக்கும். எ-று.

22தொழுவினுள், (2) புரிபு புரிபு புக்க பொதுவரைத்
(3) தெரிபு தெரிபு குத்தின வேறு

எ - து : அத்தொழுவினுள்ளே அவ்வேறுகளைத் தழுவுதற்கு விரும்பி விரும்பிக் குதித்த பொதுவரைத் தெரிந்து தெரிந்து அவ்வேறுகள் குத்தின. எ-று.

24ஏற்றின், (4) அரிபரி பறுப்பன சுற்றி
யெரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்க


பாடுசால் விறல் வெற்ப" (கலி. 46 : 9. 25; 48 : 1; 53 : 6 - 7.) என்பவற்றால் மலையை அருவி அழகுறுத்துவதாகக் கூறுதல் அறியப்படும்.

1. (அ) "ஒடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங், கொடுந்தாண்முதலையு மிடங்கருங் கராமும்" (குறிஞ்சி. 256 - 257.) என்பதனால், கராம் முதலைச்சாதி விசேடமென்பது அறியலாகும்.

2. "எழுசீரடியே முடுகிய னடக்கும்" என்பதன் பின்னுள்ள 'முடுகியல் வரையார் முதலீ ரடிக்கும்' என்னும் (தொல். செய். 66) சூத்திரத்தினுரையில் முதலீரடிக்குமென்ற வும்மை எச்சவும்மை யாதலால், நாற் சீரடியும் இத்துணைப் பயிலாது முடுகுமென்று கூறி, "புரிபு புரிபு புக்க பொதுவரைத், தெரிபு தெரிபு குத்தின வேறு" என்பதை மேற்கோள் காட்டுவர். பேர்.

3. 'செய்பு' என்னும் வாய்பாட்டு வினையெச்சம் தன் வினைமுதல் வினை கொண்டு முடிந்ததற்கு, "தெரிபுதெரிபு குத்தினவேறு" என்பது மேற்கோள்; நன். வினை. சூ. 25. மயிலை. விருத்தி: இரா. இ - வி. சூ 246.

4. கலிப்பாவுறுப்பில் முதலடி முடுகியலாயும் முதலடியும் மூன்றாமடியும் முச்சீராயும் வந்ததற்கு, "அரிபரிபு.............குடர்வலந்தன" என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 70. நச்.

(பிரதிபேதம்)1போக்கினவொள்ளிய, 2மாறுபாட்டினையுமுடைய.