பக்கம் எண் :

642கலித்தொகை

ணுருவ மாலை போலக்
குருதிக்கோட்டொடு குடர் வலந்தன

எ - து : அவை குத்தினபொழுது, எரி சுற்றிவிளங்குகின்ற (1) கணிச்சிப் படையையுடைய இறைவன்சூடிய (2) பிறையிடத்துக்கிடந்த (3) சிவந்த நிறத்தையுடைய 1மாலைபோலப் பகையான ஏறுகளை விரும்பிப் போக்குவன வாகிய 2ஏற்றினங்களின் குருதிதோய்ந்த கொம்புகளுடனே குடர்கள் சுற்றிப் பிணித்தன. எ - று.

28 3கோட்டொடு சுற்றிக் குடர்வலந்த வேற்றின்முன்
னாடிநின் (4) றக்குடர் வாங்குவான் பீடுகாண்
(5) செந்நூற் கழியொருவன் கைப்பற்ற (6) வந்நூலை
4 முந்நூலாக் கொள்வானும் போன்ம்

எ - து : அங்ஙனங் கொம்புகளோடே சுற்றிக் குடர்கள் பிணித்த ஏற்றின் முன்னே நின்று ஆடி அக்குடரை இரண்டுகையாலும் வாங்கி வயிற்றிலே


1. கணிச்சியென்பது மழுவின் வேறாயதொரு படைக்கலத்துக்கும் பெய ராயினும் 'எரிதிகழ்' என்னும் அடைமொழியை நோக்க இங்கே மழு வென்னும் பொருளில் வந்ததென்றே தோற்றுகிறது.

2. இச்செய்யுள் 15 - 16. அடிகளிலும் ஏற்றின் கொம்புக்குப் பிறை உவமையாய் வந்திருத்தல் காண்க.

3. ''கணவிர மாலை கைக்கொண்டென்ன, நிணநீடு பெருங்குடர் கையகத் தேந்தி'' மணி : 5 ; 48 - 49.

4. ''மாயா தவர்தலை வாவரங் காவட மாமதுரை, மாயா தவரண்டர் வந்தடைந் தான்மழு வாளிபிர, மாயா தவர்செய்வர் முந்நூல்செந் நூல் கொண்ட வண்ணமொப்ப, மாயா தவரத் தனைக்குடல் கோத்ததுன் வாணகமே'' திருவரங்கத். 87.

5. லகரந்திரிந்த னகரத்தின்முன் மகரம் தன்மாத்திரையிற் குறைந்து வருமென் பதற்கு, ''செந்நூற்கழி...................போன்ம்'' என்பது மேற். கோள்; இ-வி. சூ. 22.

6. செய்யுட்கண் போலுமென்னுஞ் சொல்லின் இறுதியில் னகாரம் மகாரம் வந்து ஈரொற்றுட னிலையாய் நிற்குமென்பதற்கு, ''அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம்'' என்பது மேற்கோள்; தொல். மொழி. சூ. 18. நச்.

(பிரதிபேதம்)1மாலையாறபகையான, 2ஏற்றினங்களினுடைய குருதி, 3கோடொடு, 4முன்னூலாற் கொள்லானும்.