இடுகின்றவன், சிவந்த நூற்கழியை ஒருவன் இரண்டுகையிலுங் கோத்துப் பிடித்திருக்க அந்நூலை மூன்று நூலாகக் கொள்கின்றவனையும் ஒக்கும்; இவனுடைய பெருமையைப் பாராயென்று தோழிதலைவிக்குக் காட்டினாள். எ-று. 32 | (1) இகுளை யிஃதொன்று கண்டை (2) யிஃதொத்தன் கோட்டினத் 1தாயர் மகனன்றே மீட்டொரான் போர்புக லேற்றுப் பிணரெருத்திற் றத்துபு தார்போற் றழீஇ யவன் |
எ - து : போரைக் கொண்டாடுகின்ற ஏற்றினது 2சர்ச்சரையையுடைய கழுத்திலே பாய்ந்து அதற்கு இட்ட மாலைபோலே அதனைத் தழுவினவன் எருமைத்திரளையுடைய ஆயர்மகனல்லவோ? ஆதலான் இனி அதன்வலியை மீளப்பண்ணி அதனை நீங்கான்; இளையோளே! இஃதொரு வலியைப் பாராய்; இவனொருத்தன்காணென்று காட்டினாள். எ - று. இவனொருத்தனென்றது, 3வியந்தது. 36 | (3) இகுளை யிஃதொன்று கண்டை யிஃதொத்தன் கோவினத் தாயர் மகனன்றே யோவான் மறையேற்றின் மேலிருந்தாடித் துறை (4) யம்பி யூர்வான்போற் றோன்று மவன் |
எ - து : (5) மறுவினையுடைய ஏற்றின்மேலேயிருந்து ஆடிவிட்டுப் பின்னர் நீர்த்துறையிடத்துத் தெப்பத்தின்மேற் கிடந்து அதனைத் தள்ளு
1. ''தையலோ டின்னன பெண்பாற் பெயரே'' என்புழி, இன்னன வென்பதனாலே இகுளை யென்பது உயர்திணைப் பெண்பாற் சொல் லென்று நன். பெயரி. சூ. 20. மயிலை. விருத்தி, இரா. இ - வி. சூ. 178. உரைகளிலும், தோழியை இகுளை என்பது மலாடார் சொல் லென்று (நன் பெயரி. சூ. 16) மயிலை. உரையிலும், சீதநாட்டார்சொல்லென்று விருத்தி. இரா. உரைகளிலும் காணப்படுபவை இங்கே அறிதற் பாலன. 2. இந்நூற்பக்கம் 386 : 3 - ஆங் குறிப்புப்பார்க்க. 3. இச்செய்யுளில் 32, 46-ஆம் அடிகளும் இப்படியே அமைந்துள்ளன. 4. ''தங்கார் பொதுவர் கடலுட் பரதவ, ரம்பியூர்ந் தாங்கூர்ந்தா ரேறு'' கலி. 106 : 22 - 23. 5. மறையென்பது மறுவென்னும் பொருளில் வருதல், ''செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளை'' (கலி. 101 : 27) என்புழி 'மறை' என்பதற்கு எழுதியிருக்கும் உரையாலும் அறியலாகும் (பிரதிபேதம்)1ஆய மகனென்றே விட்டொரான், 2சாசரையுடைய, 3வியந்து இகுளை.
|