பக்கம் எண் :

542கலித்தொகை

வழியசையும் புணர்த்து, கண்ட 1தெவனோதவறென முற்றடியின்றிக் குறைவு சீர்த்தாகிய சொற்சீரடியும்பெற்று, கலிவெண்பாவின் வேறுபட்டு, 2"பாநிலை வகையே கொச்சகக் கலியென, நுானவில் புலவர் நுவன்றறைந் தனரே” (1)என்னும் விதியாற் கொச்சகக்கலியாயிற்று. (25)

(91.)அரிநீ ரவிழ்நீல மல்லி யனிச்சம்
 புரிநெகிழ் முல்லை நறவோ டமைந்த
 தெரிமலர்க் கண்ணியுந் தாரு நயந்தார்
 பொருமுரண் சீறச் சிதைந்து நெருநையி
 னின்றுநன் றென்னை யணி;

 

6 அணைமென்றோளாய், செய்யாத சொல்லிச் சினவுவ தீங்கெவ
 னையத்தா லென்னைக் கதியாதி தீதின்மை
 தெய்வத்தாற் கண்டீ தெளிக்கு;

 

9 மற்றது, அறிவல்யா னின்சூ ளனைத்தாக நல்லார்
 செறிதொடி யுற்ற வடுவுங் குறிபொய்த்தார்
 கூருகிர் சாடிய மார்புங் குழைந்தநின்
 றாருந் ததர்பட்ட சாந்தமுஞ் சேரி
 யரிமத ருண்கண்ணா ராராக் கவவிற்
 பரிசழிந் தியாழநின் மேனிகண் டியானுஞ்
 செருவொழிந்தேன் சென்றீ யினி;்

 

16 தெரியிழாய், தேற்றாய் சிவந்தனை காண்பாய்நீ தீதின்மை
 யாற்றி னிறுப்பல் பணிந்து;
18 அன்னதே லாற்றல்காண்;
 வேறுபட் டாங்கே கலுழ்தி யகப்படின்
 மாறுபட் டாங்கே மயங்குதி யாதொன்றுங்
 கூறி யுணர்த்தலும் வேண்டாது மற்றுநீ
 மாணா செயினு மறுத்தாங்கே நின்வயிற்
 காணி னெகிழுமென் னெஞ்சாயி னென்னுற்றாய்
 பேணாய்நீ பெட்பச் செயல்.

இதுவும் அது.

இதன் பொருள்.

1. தொல். செய். சூ. 155.


(பிரதிபேதம்) 1. எவனென்றவறெனமுட்டடி, 2. பாநிலவகையே.