எ - து: அதுகேட்ட தலைவி, செறிந்த மழையாகிய தண்ணிய துளியைப் பெய்கின்ற இராக்காலத்தே ஒருவன் செய்த குறியிடத்தே வந்தாளொருத்தியைநீ (1) கண்டதனால் உனக்குநிகழ்ந்த கனவு இதுவெனச் சொல்லி, நீ செய்ததனை நினையாதே அச்செய்தியை மாறுதலுற்று நின்றாய்; அங்ஙனம் நின்று பின்னர் நீ சூளுற்ற நின்னுடைய பொய்யாகிய சூளுறவு 1யாம் நுண்மையாகக் கண்டமையின் நினக்குப் பண்டுபோற் பயன்றருந் தன்மையையுடையவல்ல; ஆதலால் ஏடா! நினக்குப் புகும் இல்லுப்பலவால்; ஆண்டே செல்லென்றாள். எ - று. கண்ட கனவு, உண்ட எச்சில்போல 2நின்றது. 26 மென்றோளாய், நல்குநின் னல்லெழி லுண்கு எ - து: அதுகேட்ட தலைவன், மெல்லிய தோளினையுடையாய்! இனியான் செய்த குறையைக் கைவிட்டு நின்னுடைய நன்றாகிய அழகை நல்கி அருள்; அதனை யான் நுகர்வேனென்றான். எ - று. 27 | ஏடா, குறையுற்று நீயெம் முரையனின் றீமை (2)பொறையாற்றே மென்றல் பெறுதுமோ யாழ நிறையாற்றா நெஞ்சுடை யேம் | எ - து: எம் வயத்ததாக நிறுத்தமாட்டாத நெஞ்சையுடைய 3யாம் நினது தீமையைப் பொறுத்தலை நடத்த மாட்டேமென்று கருதுதலைப் பெறுவேமோ? 4பெறேம்; ஆதலால், இக்காரியத்திலே உற்று எமக்குச் சில குறை கூறாதே கொள்ளென்று ஊடறீர்ந்தாள். எ - று. "பிறவும்" (3) என்றதனால், சேரிப்பரத்தையாற் புலந்து கூறினாள். இதனால், தலைவிக்கும் தலைவற்கும் புணர்வாகிய உவகை பிறந்தது. இஃது ஒண்டொடி நீயெனவும் தேறினெனவும் 5அல்கலெனவும் ஒழியசையும் பிறவுந் தவறிலேன்யானெனவும் கனவுக்கொனீகண்ட தெனவும்
1. "நனவிற்றான் செய்தது மனத்த தாகலிற், கனவிற் கண்டு" (கலி. 49: 3 - 4.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 2. "எண்ணியவையெல்லாந், துறைபோதலொல்லுமோ தூவாகாதாங்கே, யறைபோகு நெஞ்சுடையார்க்கு" (கலி. 67: 19 - 21) என்பதும் இந்நூற்பக்கம் 408: 3 - ஆம் குறிப்பும் பார்க்க. 3. தொல். கற்பி. சூ. 10. இச்சூத்திரப் பகுதியின் இவருரையிலும் "ஆராக் கவவின்...............இறுத்த தமையுமோ" என்னும் இப்பாட்டின் பகுதி, காமக்கிழத்தியர் சேரிப்பரத்தையரற் புலந்து தலைவனொடு கூறியதற்கு மேற்கோள். (பிரதிபேதம்) 1. யாமுண்மையாக, நானுண்மையாக, 2. நின்றன, 3. யானினது தீமையை, 4. பெறேமேயாதலால், 5. அல்கலெனவும் வினாவும் தவறிலேன்.
|