20 | தேறிற், பிறவுந் தவறிலேன் யான் | | அல்கற், (1) 1கனவுக்கொ னீகண் டது |
எ - து: அதுகேட்ட தலைவன் யான் தேற்றத் தெளிவையாயின் இக் கேட்பதோர் தவறு யான் உடையே 2னல்லேன்; (2) இராக்காலத்து நீ கண்டது தான் கனவுபோல இருந்ததென்றான். எ - று. 22 | (3)கனைபெயற், றண்டுளி வீசும் பொழுதிற் குறிவந்தாட் | | கண்ட கனவெனக் காணாது மாறுற்றுப் | | பண்டைய வல்லநின் பொய்ச்சூ 3ணினக்கெல்லா | | நின்றாய்நின் (4) புக்கில் பல |
1. முற்றியலுகரம் ஒற்றடுத்து உரியசையானதற்கு, "கனவுக்கொ னீகண்டது" என்பதை மேற்கோள் காட்டி, இங்ஙனம் வருமொழியொற்று மிகினும் நிரைபாமெனவும் நிலைமொழியொற்று நின்றவழிப் புளிமாவா மெனவும் விளக்குவர், பேராசிரியர்; தொல். செய்யுளி. சூ. 10. 2. "இரவு கண்டே னொருகன வதனின், புதுமை கேட்கிற் புரைதீர்ந்தது வெனச், செவ்வாய் வெண்ணகைத் திருந்திழை கண்ட, தெவ்வா றோவென வியம்பினன் கேட்பநின், மனத்துழைப் பெயரா வெனைக் கரந் தெழுந்தனை, தனித்துப் போயோர் தடந்தோண் மடந்தையோ, டாடரங் கேறி யணைந்திருந் தவளோ, டூடியு முணர்ந்துங் கூடிவிளை யாடியுந், தேறினி ராகித் தெளிவுட னிருவிரு, மாறுமா றெழுதிய வாசகங் கூறி, மாதரு நீயு மயலுரைத் தெழுந்து, போதரும் போதையின் மோதிர மருளிப், பெயர்ந்தனை நயனமு மலர்ந்தன வாங்கே, புலர்ந்தது கங்குலும் புரவல வாழ்கென, வண்டலர் கோதாய் மனத்தினு மில்லது, கண்டனை யாதலிற் கலங்கினை மற்றுநின், னுள்ளத் துள்ளே யுறைகுவே னாகவுங், கள்வ னென்று கருதினை யன்றியு, நெறியுடை மகளிர் நினைப்பவுங் காண்பவு, மிவையிவைபோலுங் கணவர்தந் திறத்தெனக், கனவிற் கண்டது பிறரொடு பேசக், குறைபோ மென்றலிற் கூறினே னன்றியும், யாவை காணினுங் காலவற் கன்றிப், பேசுவ தெவரொடு பெரியோ யென்று, மானார் நோக்கி மனத்தொடு நகையா, வானா நினைவுட னகறர வேந்தன், றேவியை யையந்தெளித்தனமொரு வகை, யாரு மில்லென வினிதிருந் துவப்ப" பெருங். (4) 13: 189 - 216. 3. இந்நூற்பக்கம் 273: 3 - ஆம் குறிப்புப் பார்க்க. 4. "புக்கில்" குறள். 340. (பிரதிபேதம்) 1. கனவிற்கொல், கனவுகொல், 2 அல்லேன் நீகண்டதுதான்இராக்காலத்துக் கனவுபோலே, 3. நினக்கேடா.
|