பக்கம் எண் :

544கலித்தொகை

கூருகிர் சாடிய மார்புங் (1)குழைந்தநின்
றாருந் (2)ததர்பட்ட சாந்தமுஞ் சேரி
யரிமத ருண்கண்ணா (3)ராராக் கவவிற்
பரிசழிந் தியாழநின் மேனிகண் டியானுஞ்
செருவொழிந்தேன் சென்றீ யினி

எ - து: அதுகேட்ட தலைவி, 1யான் நீ நீங்கியபின்னர் நீசெய்த காரியமும் அறிவேன்; நின்சூளுறவு பொய்யாதலும் அறிவேன்; புதிய பாரத்தையருடைய செறிந்த தொடியழுந்தின வடுவையும் அவர் 2முயக்கத்தாற் குழைந்த நின் தாரையும் நீ குறியாற் பொய்க்கப்பட்ட பரத்தையர் கோபித்துக் கூரிய உகிரால் தாம் விரும்பியாங்கு வடுச்செய்த மார்பையும் சேரியிலிருந்த செவ்வரியினையுஞ் செருக்கையுமுடைய மையுண் கண்ணினையுடையாருடைய நிறையாதமுயக்கத்தாலே பூசின பாடழிந்த சிதறுதல்பட்ட சந்தனத்தையுமுடைய நின்வடிவைக் கண்டு இதற்குரிய யானும் நின்னோடு ஊடுதலைத் தவிர்ந்தேன்; இனி அப்பரத்தையரிடத்தே செல்வாயென்றாள். எ - று.

16தெரியிழாய், தேற்றாய் சிவந்தனை காண்பாய்நீ தீதின்மை
யாற்றி னிறுப்பல் பணிந்து

எ - து: அதுகேட்ட தலைவன் தெரிந்த இழையினையுடையாய்! யான் தெளிவித்ததனைக்கொண்டு நின்னெஞ்சைத் தெளிவியாயாய்க் கோபித்தாய்; யான் தீயேனல்லாமையை நின்னைத்தாழ்ந்து நெறியாலே நின்னெஞ்சிடத்தே நிறுத்துவேன்; அதனைக் காண்பாயாகவென்றான். எ - று.

183அன்னதே லாற்றல்காண்
 வேறுபட் டாங்கே கலுழ்தி யகப்படின்
 மாறுபட் டாங்கே 4மயங்குதி யாதொன்றுங்
 கூறி யுணர்த்தலும் வேண்டாது மற்றுநீ
 மாணா செயினு மறுத்தாங்கே நின்வயிற்
 காணி னெகிழுமென் னெஞ்சாயி 5னென்னுற்றாய்
(4)பேணாய்நீ பெட்பச் செயல்

கலி. 68 : 14; 112 : 23. புறம். 73 : 14.

2. (அ) “ஊன்றதர்ந் திழிந்த வுதிர வெம்புனல்"(ஆ) “மிதிதோற் கொல்லன் பொதியுலைச் செந்தீத், ததர்வனபோலச் சிதர்வன சிந்தி"(இ) “ததரிதழ் ஞாழல்" பெருங். (1) 52 : 117, 58 : 9 - 10. (3) 9 : 27.

3. “ஆராக் கவவி னொருத்தி" கலி. 90 : 10.

4. (அ) “பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க், காணா தமைவில கண்"(ஆ) “பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்காணா, தமையலகண்"குறள். 1178; 1283.

(பிரதிபேதம்) 1. யானீங்கியபின்னர் நீ செய்தகாரியமுமறியேன்நின், 2. முயக்கத்தாற்றாழ்ந்த நின், 3. அன்னதேயாற்றல், 4. மயக்குதியாதொறும், 5. என்றுற்றாய்பேணாந.ீ