எ - து: அதுகேட்ட தலைவி,. இவன் கருத்து இன்னும் தீதின்மையே யென்பது நெஞ்சிடத்தே நிறுத்துதலேயாயின், இவன் வலியை நெஞ்சே காண்பாயாகவென நெஞ்சொடு கூறி, அவனைநோக்கி, யான் நின்னோடு வேறுபட்ட 1அப்பொழுதே நெஞ்சு கலங்குவை; யான்வேறுபடாமல் நின்கையிலே அகப்படுவேனாயின், அக்கலக்கத்தை மாறுபட்டபொழுதே என்னை இகழ்ந்து பரத்தையர்பாற்சேறற்கு மனம் மயங்குவை; ஆதலால், யாதொரு வார்த்தையையுஞ் சொல்லி என்னை ஊடலுணர்த்துதலும் உனக்கு வேண்டாததொரு காரியம்; 2இக்குறையையொழிய நீ வேறு மாட்சிமைப்படாத குறைகளைச் 3செய்யினும் அவற்றைத்தள்ளி, நின்னைக்காணின், அப்பொழுதே என்னெஞ்சு நின்னிடத்தே நெகிழ்ந்துவருமாயின், என்னெஞ்சின்றன்மையை உட்கொள்ளாயாய் நீ யான் விரும்பும்படி என்னெஞ்சைத் தெளிவிக்குஞ் செயல்களை என்ன காரியத்திற்குச் செய்தாயென ஊடறீர்ந்தாள். எ - று. இதனால், இருவர்க்கும் புணர்ச்சியாகிய உவகை பிறந்தது. இஃது ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய்பெற்றும் வந்து போக்கின்றி உற்ற உறழ்கலி. “கூற்று மாற்றமு மிடையிடை மிடைந்தும், 4போக்கின்றாக லுறழ் கலிக் கியல்பே” (1) என்பது விதி. (26) (92.) | புனவளர் பூங்கொடி யன்னாய் கழியக் | | கனவெனப் பட்டதோர் காரிகை நீர்த்தே | | முயங்கிய நல்லார் முலையிடை மூழ்கி | | மயங்கிமற் றாண்டாண்டுச் சேறலுஞ் செல்லா |
1. தொல். செய். சூ. 156. இச்சூத்திரத்தினுரையில் உறழ்கலிக்கு இச் செய்யுளைமேற்கோள்காட்டி, “காணினெகிழும்.................செயல்’ என்பது வெள்ளைச்சுரிதகமாகாததோ வெனின், ஆகாதன்றே? ‘போக்கியல் வகையே வைப்பெனப் படும்’ என்ற இலக்கணத்தான் முற்கூறியவற்றை யெல்லாந் தொகுத்து இதன்கண் வைத்தில்லாமையி னென்பது; அல்லதூஉம் அவ்வாறு முடிதலே யன்றி இன்னும் ஓர் கொச்சகம் பெய்து சொல்லி உறழ்ந்த வழியும் அஃதேற் பதாகலான், அஃது ஒருதலையாக அமைந்ததெனப் படாது; என்னை? ‘அன்னதேயாயினுமாகமற்றாயிழாய், நின்னகை யுண்க முயங்குவாய் நின்னெஞ்ச, மென்னொடு நின்ற தெனின்’ என்றாற்போலப் பின்னுமொன்று தலைமகன் உரைத்தற்கு இடம் பட்டு நின்றமையின், இது போக்கியல் வகைத்தாகியவைப் பெனப்படா தென்க" என்பர் பேராசிரியர். நச்சினார்க்கினியரும் இதனையே தழுவிச் சுருக்கி யெழுதுவர். (பிரதிபேதம்) 1. அப்பொழுதே நின்னெஞ்சு கலங்குவையாயின் வேறு, 2. இக்குறைகளை, 3. நீசெய்யினும், 4. போக்கின் றாதலு முறழ்.
|