பக்கம் எண் :

மூன்றாவது மருதம்555

எ - து: அதுகேட்ட தலைவி, நின்னை நின்னுடைய பெண்டிர் புலந்தனவற்றையும் நீ அவருடைய அடிமுன்னே வணங்கிப் புலவிதீர்த்தனவற்றையும் (1)பலபடியாகக் கனவின்மேலிட்டுக் கூறுதல், யான் 1சினந்து செய்வதொரு படிறின்றென்பதனை உட்கொண்டோ? சொல்லென்றாள். எ - று.

உரையல், படுத்தலோசையாற் றொழிற்பெயராயிற்று.

59பொய்கூறேன், 2அன்ன வகையால்யான் கண்ட 3கனவுதா
னன்வாயாக் காண்டை நறுநுதால் பன்மாணுங்
(2)கூடிப் புணர்ந்த்ீ்ர் பிரியன்மி 4னீடிப்
பிரிந்தீர் புணர்தம்மி னென்பன போல
வரும்பவிழ் பூஞ்சினை தோறு மிருங்குயி
லானா தகவும்பொழுதினான் மேவர
65நான்மாடக்கூடன் (3)மகளிரு மைந்தருந்
தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமா
ரானா விருப்போ டணியயர்ப காமற்கு
வேனில் விருந்தெதிர் கொண்டு

எ - து: அதுகேட்ட தலைவன், யான் பொய்சொல்லேன்; நறிய நுதலினையுடையாய்! பல மாட்சிமையும் உண்டாய்ப் புணர்ந்தீர் பிரியாதேகொள்ளும்;


1. இந்நூற்பக்கம் 288: 3-ஆம் குறிப்புப்பார்க்க.

2. (அ) "புணர்ந்தீர் புணர்மி னோவென விணர்மிசைச், செங்க ணிருங்குயி லெதிர்குரல்பயிற்று, மின்ப வேனிலும்வந்தன்று” (ஆ) "பொதும்புதோ றல்கும் பூங்க ணிருங்குயில், கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கையிட், டகற லோம்புமி னறிவுடை யீரெனக், கையறத் துறப்போர்க் கழறுவ போல, மெய்யுற விருந்து மேவர நுவல” நற். 224: 4 - 6. 243: 4 - 8. (இ) "ஊடினீ ரெல்லா முருவிலான் றன்னாணை, கூடுமினென்று குயில்சாற்ற - நீடிய, வேனற்பா ணிக்கலந்தாண் மென்பூந் திருமுகத்தைக், கானற்பா ணிக்கலந்தாய் காண்” சிலப். 8. இறுதி.

3. (அ) "தேவியருந் திருமாலுஞ் செழுமலர்த்தார்த் தனஞ் சயனுந், தேவிமாரு, மேவியனந்தரம்வேனில் விழவயர்வான் முரசறைந்து வீதிதோறு, மோவியமு முயிர்ப்பெய்த வுபேந்திரனுமிந்திரனுமுவமைசாலப், பூவினமுஞ் சுரும்புமெனப் புரமுழுதும் புறப்படவண் பொங்கர் சேர்ந்தார்” வில்லி. வசந்தகாலச்: (ஆ) ”விருந்து வேனிலாற் கெதிரிய விரைமலர்க் காவு, முருந்து வாணகை முகிழ்முலை மடைந்தையோ டாடிப், பொருந்த விண்ணிடைப் போகமுண் டுவந்தனர் போன்றான்” நைடத. அரசாட்சி. 15. (இ) "கலி. 27: 24, 30 : 13 - 14, 35 : 13 - 14.

(பிரதிபேதம்)1. சினத்து, 2. அனவகை, 3. கனவுத்தானனவாகக்கண்டை, 4. நீடிப்புணர்தம்மின்.