பக்கம் எண் :

558கலித்தொகை

பண்டின்னை யல்லைமன் னீங்கெல்லி வந்தீயக்
கண்ட தெவன்மற் றுரை;
5நன்றும், தடைஇய மென்றோளாய் கேட்டீவா யாயி
னுடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங்
கடவுளர் கட்டங்கி னேன்;
8 சோலை, மலர்வேய்ந்த மான்பிணை யன்னார் பலர்நீ
கடவுண்மை கொண்டொழுகு வார்;
10 அவருள், எக்கடவுண் மற்றக் கடவுளைச் செப்பீமன்
முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கா
லிப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய
வக்கடவுண் மற்றக் கடவு ளதுவொக்கும்
நாவு ளழுந்து தலைசாய்த்து நீகூறு
மாயமோ கைப்படுக்கப் பட்டாய்நீ கண்டாரை
வாயாக யாங்கூற வேட்டீவாய் கேளினி;
17பெறனசை வேட்கையி னின்குறி வாய்ப்பப்
பறிமுறை நேர்ந்த நகாராகக் கண்டார்க்
கிறுமுறை செய்யு முருவொடு நும்மிற்
செறிமுறை வந்த கடவுளைக் கண்டாயோ;
21நறுந்தண் டகரமு நானமு நாறு
நெறிந்த குரற்கூந்த னாளணிக் கொப்ப
நோக்கிற் பிணிகொள்ளுங் கண்ணொடு மேனாணீ
பூப்பலி விட்ட கடவுளைக் கண்டாயோ;
25ஈரணிக்கேற்ற வொடியாப் படிவத்துச்
சூர்கொன்ற செவ்வேலாற் பாடிப் பலநாளு
மாராக் கனைகாமங் குன்றத்து நின்னொடு
மாரி யிறுத்த கடவுளைக் கண்டாயோ;
29கண்ட கடவுளர் தம்முளு நின்னை
வெறிகொள் வியன்மார்பு வேறாகச் செய்து
குறிகொளச் செய்தார்யார் செப்புமற் றியாருஞ்
சிறுவரைத் தங்கின் வெகுள்வர் செறுதக்காய்
தேறினேன் சென்றீநீ செல்லா விடுவாயே
னற்றா ரகலத்துக் கோர்சார மேவிய