பக்கம் எண் :

மூன்றாவது மருதம்559

நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கு
முட்டுப்பா டாகலு முண்டு.

இது “காவற் பாங்கி னாங்கோர் பழக்கமும்” (1) என்புழி, ஆங்கோர் பக்கமான(2) கடவுளரைக்கண்டு தங்கினேனென்ற தலைவற்கு நீ கண்ட கடவுளர் இவரெனக் கூறிப் புலந்தது.

இதன் பொருள்.

(3)வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய
(4)தண்டாத்தீஞ் சாயற் பரத்தை வியன்மார்ப
பண்டின்னை யல்லைமன் னீங்கெல்லி வந்தீயக்
கண்ட தெவன்மற் றுரை

எ - து: அமையாத இனிய மென்மையினையும் 1பரத்தைமைக் குணத்தையுமுடைய, வண்டுகள் ஊதுஞ்சந்தனத்தைக் கை வடுக்கொளப் பூசின அகற்சியையுடைய மார்பனே! முன்பு இத்தன்மையையுடையையல்லை; (5)அத்தன்மை போயிற்று; இவ்விடத்து இராக்காலத்தேவர நீ புறத்துப்போய்க் கண்ட வினோதம் எத்தன்மைத்து? பின்னை அதனைக் கூறென்றாள். எ - று.

5 நன்றும், (6)தடைஇய மென்றோளாய் கேட்டீவா யாயி
(7)னுடனுறை 2வாழ்க்கைக் குதவி யுறையுங்
கடவுளர் கட்டங்கி னேன்


1. தொல். அகத். சூ. 41.

2. கடவுளர்மாட்டுப் பிரிந்து வந்த தலைமகனைத் தலைவி புணர்ச்சி மறுத்தற்கு இச்செய்யுளை மேற்கோள் காட்டி, இது புணர்ச்சிக்கு உடன் படாது கூறியதென்றும், கலித்தொகையில், கடவுட் பாட்டினுள் உரிப்பொருண்மைபற்றிவரும்பாட்டு மருதநிலத்துத் தலைமகன்பெயர் கூறாது பிறபெயர்படக் கோத்தமையானும் ஊடற்பொருண்மையின் வேறுபாடுண்மை அறிகவென்றும் கூறுவர் இளம்பூரணரும்; தொல். அகத். சூ. 44. ‘ஒன்றாத்தமரினும்’

3. ‘வண்டூதுதல்’ சீவக. 1700; நள. சுயம்; 99; காஞ்சி. சித்தீசப். 1.

4. “தண்டாத்தீஞ் சாய னெடுந்த காய்” கலி. 92 : 14.

5. “கழிவே.............என்ப மன்னைச் சொல்லே” தொல். இடை. சூ. 4.

6. (அ) "அம்பணைத் தடைஇய மென்றோள்” நெடுநல். 149. (ஆ) "தடைஇத் திரண்டநின் றோள்” அகம். 218 : 8: என்பவையும் (இ) "தடையின திரண்டதோள்” (கலி. 45 : 15.) என்பதும் அதன் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்)1 பரத்தமை, 2வாட்கை.