பக்கம் எண் :

560கலித்தொகை

எ - து; அதுகேட்ட தலைவன், (1) பெரிதும் பெருத்த மெல்லிய தோளினையுடையாய்! யான் கூறகின்றதனைக் (2) 1கேட்பாயாயிற்கேள்; யாம் இருவரும் போய் உடனே 2துறவகத்திருக்கும் வாழ்க்கைக்கு உதவியாயிருக்குங்கடவுளரைக் கண்டு அவரிடத்தே தங்கினேனென்றான். எ-று.

இல்லறம் நிகழ்த்தி வானப்பிரத்தம் நிகழ்த்துங்கால் உடனுறைதலின் உடனுறைவாழ்க்கையென்றான். நூல்களான் உணர்த்துதலை உதவியென்றான். அது, "காமஞ்சான்ற” என்னும் (3) சூத்திரத்தில், “சிறந்தது பயிற்ற 3லிறந்ததன் பயனே” என்பதனா னுணர்க.

8சோலை, மலர்வேய்ந்த மான்பிணை யன்னார் பலர்நீ
(4) கடவுண்மை கொண்டொழுகு வார்
10அவருள், எக்கடவுண் மற்றக் கடவுளைச் செப்பீ மன்

எ - து: அதுகேட்ட தலைவி, கடவுட்டன்மை உண்மையாகக் கொண்டு நடத்துவார், சோலையில் மலரைச் சூடின மான்பிணைபோலும் நோக்கினையுடைய 4பரத்தையர் பலருளர்; அப்பரத்தையருள் நீ கூறிவந்தகடவுள் எந்தக் கடவுள்? அக்கடவுளைச் சொல்லுவாயென்றாள். எ-று.

மற்று, வினைமாற்று.

(5)முத்தேர் முறுவலாய் நா (6) மணம் 5புக்கக்கா
6லிப்போழ்து போழ்தென்றதுவாய்ப்பக் கூறிய
7வக்கடவுண் மற்றக் 8கடவுள்

1. “நன்று பெரிதாகும்” "தடவும்...............பெருமை” தொல். உரி. 45, 22.

2. இப்பொருளுக்கு மூலமாகிய “கேட்டீவாயாயின்” என்பது வினையெச்ச வினைத்திரிசொல்லுக்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 61. நச்.

3. தொல். கற்பி. சூ. 51.

4. கலி. 98 : 13 - ஆம் அடிக்குறிப்பிலுளதாகும். அம்பிகாபதிகோவை. 510-ஆம் செய்யுள் இங்கும் அறிதற்பாலது.

5. (அ) "தொன்முதுகடவுள்” என்புழி, இருடியைக் கடவுளென்று கூறியதற்கு, “முத்தேர்...............மற்றக் கடவுள்” என்னும் பகுதியை மேற்கோள்காட்டினர் நச்; மது. 40.- 42.. உரை. (ஆ) ”முத்தேர் முறுவலாய்” கலி. 64:29; 97 6. இந்நூற்பக்கம் 390: 2-ஆம் குறிப்புப் பார்க்க.

6. (அ) ”நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ,,,,,,,,,,,,,,,,,வந்தனன்” (கலி. 39:46-50)
என்பதும் அதன் உரையும்,

(பிரதிபேதம்)1கேட்பையாயின்யாம், 2 துறக்கத்து, 3இறந்தது, 4பரத்தையர் அவருள்நீ, 5 புக்ககால், 6இப்பொழுது பொழுதென், 7எக்கடவுள், 8கடவுளது வொக்கும், நாவு...............கேளினி. எ - து. பின்னை.................உளவாகலின், அதுகேட்ட.....................கூறினாள், உள்ளேயழுந்து.