பக்கம் எண் :

மூன்றாவது மருதம்563

எ - து: பார்வையாலே பிணித்தலைக் கொள்ளுங் கண் வருத்துதலாலே நறிய [தென] குளிர்ந்த 1மயிர்ச் சாந்தமும் புழுகும் நாறும் அறல்பட்ட (1) பற்றத்தையுடைத்தாகிய மயிர்க்கு நாட்காலத்து அணியும் அணிக்குப் பொருந்த நீ முதனாட் பூவைப் 2பலியாகப்போகவிட்ட கடவுளரைக் கண்டாயோ வென்றாள். எ - று.

ஒடு, ஆலாக்குக. மேல், கடவுளென்றதற்கேற்பப் பலியென்றார். அருணோக்கினாற் பிணியை வாங்கிக்கொள்ளுங் 3கண்ணினராகையாலே கூந்தலை யுடையாள் நாட்காலத்து அணிதற்கேற்பப் பூப்பலியைக் கைவிட்டு அர்ச்சித்த கடவுளரென்பதும் ஒன்று. கூந்தல், ஆகுபெயர். 4பராசத்தியைப் பூவால் அர்ச்சித்த கடவுளரென்றுணர்க. நீ கண்டாயோவென்க.

25

(2)ஈரணிக் கேற்ற வொடியாப் படிவத்துச்
சூர்கொன்றசெவ்வேலாற் பாடிப் பலநாளு
மாராக் கனைகாமங்குன்றத்து நின்னொடு
மாரி யிறுத்த கடவுளைக்கண்டாயோ

எ - து: கெடாத விரதத்தாலே முகங் குதிரைமுகமும் உடல் மக்களுடலுமாகிய இரண்டு அழகுக்குப் பொருந்திய சூரபன்மாவைக் கொன்ற சிவந்த வேலையுடைய முருகனைப் புகழ்ந்து நிறையாத செறிந்த காம வேட்கையாலே திருப்பரங்குன்றினிடத்தே நின்னோடே மாரிக்காலத்தே பலநாளுந் தங்கின கடவுளரைக் கண்டாயோ வென்றாள். எ - று.

இனி, பெண்ணும் ஆணும் ஆகிய இரண்டு 5அழகினுக்கும் பொருந்திய செவ்விதாகிய (3) 6எழுச்சியையுடைய இறைவனை அமையாத செறிந்த வீடு பேற்றில் ஆசையாலே பலநாளும் புகழ்ந்து கொடுந்தொழில்களைக் கொன்ற


பன் முரச மார்ப்ப வில்லுறை தெய்வம் பேணிக், கொங்கலர் கூந்தற் செவ்வா யரம்பையர் பாணி கொட்டி, மங்கள கீதம் பாட மலர்ப்பலி வகுக்கின்றாரை” என்று பூப்பலி பலநூல்களிலும் கூறப்படுதல்காண்க.

1. பற்றம்-கொத்து;கற்றையென்றும் கூறப்படும்.

2. (அ) "இருபே ருருவி னொருபே ரியாக்கை................மாமுத றடிந்த மறுவில்கொற்றத், தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்” முருகு. 57 - 61. (ஆ) "ஈருருவத் தொருபெருஞ்சூர் மருங்கறுத்த விகல்வெய்யோய்” தொல். செய். சூ. 152. பேர். நச். மேற்கோள்; ‘செஞ்சுடர்’.

3. ஏல் என்பது ஏர் என்பதுபோலவே எழுச்சி யென்னும் பொருளில் வருதலை (அ) 'ஏல்பெற்று' (சீவக. 302.) என்றதற்கு, இவர் ‘ஏல்-மனவெழுச்சி’ என்று சொற்பொருள் குறித்து உணர்ச்சிபெற்று, என்று கருத்துரை எழுதியிருப்பதும். (ஆ) "எதிர்மலர்க்குவளையிடுநீர்சொரிந்து,

(பிரதிபேதம்)1மயிர்ச்சந்தனமும், 2பலியாகவிட்ட, 3கண்ணுடையா ராகையாலே, 4பாசத்தியைப், 5அழகுக்குப்பொருந்தின, 6எழுச்சியுடைய.