பக்கம் எண் :

564கலித்தொகை

கெடாத விரதத்தோடே மலைகளிலே மாரிக்காலத்திலே நின்னோடு உறவுகொண்டிருந்த தவஞ்செய்த கடவுளரைக்கண்டாயோவென்பதும் ஒன்று தோன்றிற்று. சத்தியுஞ் சிவனும் ஒன்றாகிய வடிவைப் பாடி என்க. நின்னொடென்ற ஒடுவிற்கு உறவு கொண்டிருந்தவென ஒரு வினை வருவிக்க.

29கண்ட கடவுளர் தம்முளு நின்னை
வெறிகொள்வியன்மார்பு வேறாகச் செய்து
குறிகொளச் செய்தார்யார்செப்புமற் றியாருஞ்
(1) சிறுவரைத் தங்கின்வெகுள்வர் 1செறுதக்காய்
தேறினேன்சென்றீநீ 2செல்லா விடுவாயே
(2) னற்றாரகலத்துக் 3கோர்சார மேவிய
நெட்டிருங்கூந்தற் கடவுள ரெல்லார்க்கு
முட்டுப்பா டாகலு முண்டு.

எ - து: நீ கண்ட கடவுளர் தங்களுள்ளும் நின் மணத்தைத் தன்னிடத்தே கொண்ட அகலத்தையுடைய மார்பைப் பழையதன்மை குலைந்து போம்படி பண்ணிப் பிறர்முயங்காதபடி அடையாளமாக வடுப்படுத்துதலைச் செய்தார் யார் சொல்லு; 4பின்னை அப்பரத்தையர் யாவரும் சிறிதாகியகாலத்தளவு இங்கே தங்குவையாயின் 5கோபிப்பார்; ஆகையினாலே எம்மாற்செறுக்கத்தக்கவனே! நின் 6பொய்மையெல்லாம் உள்ளபடி யான் அறிந்துதெளிந்தேன்; இனி அவர்பாற் செல்லாதொழிவை யாயின், நினது நல்ல தாரையுடைய மார்பத்துக்கு ஒரு முட்டுப்பாடு உண்டாமது; நீ சாரும்படி நின்னை முயங்கிய நெடிய 7கரியகூந்தலையுடைய பரத்தையரெல்லார்க்கும் முட்டுப்பாடு உண்டாதலும் உண்டு; ஆதலால் ஆண்டே செல்லெனப் புலந்து கூறினாள் . எ - று.

தம்முளுமென்ற உம்மை, சிறப்பும்மை.

இனி, கடவுளர்தம்முளும் வியன்மார்பையுடைய நின்னை மனம் வேறாகப் பண்ணி வானப்பிரத்தத்தைக் குறித்தல் கொள்ளும்படி பண்ணின


சீதச் சந்தனந் தாதோ டப்ப, வேஎல் பெற்றெழுந் திருந்தன னுரைக்கென” (பெருங்.(2) 9: 156-158) எனவருவதும் வலியுறுத்தும்.

1. சிறுவரை-சிறுதுநாழிகை. அகம். 13:8 பு-வெ. பெருந். 17. இது, சிறிது நாழிகைத் தூரமான இடமென்னும் பொருளிலும் வரும் ஐங். 388.

2. “இல்லது காய்தலென்பது, கனவின்கட் போலாது தலைமகற்கு இல்லாததனை உண்டாக்கிக் கொண்டு காய்தல்; அது: ‘நற்றாரகலத்து... .........முண்டு’ எனவரும்; இது கடவுளரையே கண்டு தங்கினானாயி

(பிரதிபேதம்)1 செறுத்தக்காய், 2செல்லாய் விடு, 3கொருசாாமேவிய, 4பின்னையாவரும், 5அப்பரத்தையர் கோபிப்பார், 6பொய்மெய்யெல்லாம், 7கருங்கூந்தலை யுடையரெல்லார்க்கும்.