பக்கம் எண் :

மூன்றாவது மருதம்565

இருடிகள் யார்தான் சொல்லு; யாவரும் வெகுள்வர்; அவர்பாற் செல்லாதொழிவாயேல், நல்ல ஒழுங்கினையுடைத்தாகிய கடாவின்புறத்தே தோன்றும் விடைகளையுடைய, (1) நீரைப் பலகாலுஞ் சாருதலாலே ஈரம்பொருந்திய நெடிய கரிய சடையினையுடைய இருடிகளெல்லார்க்கும் முட்டுப்பாடு பிறத்தலும் உண்டென்பதும் ஒன்று தோன்றநின்றது. அவர்க்கு முட்டுப்பாடு நினக்குக் கூடும் பொருள்கள் 1கூடாமையாலுள்ள முட்டுப்பாடு. தார்-ஒழுங்கு (2)அகலமென்றது, பரசமயத்தார் கூறுங் கடாவிற்கு விடையாகக் கூறும் 2விகற்பங்களை. “தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினுந், துன்னிய கடாவின் புறந்தோன்றும் விகற்பம், பன்னிய வகல மென்மனார் புலவர்” "தெள்ளிது” (3)என்றதனால், நின்னை மார்பை வேறாகச் செய்தென்[றார்](றலுமாம்).

இதனால், தலைவிக்கு இழிவும் தலைவற்கு அசைவும் பிறந்தது.

“மரபுநிலைதிரியா 3மாட்சிய” என்னும் (4)சூத்திரத்தில், தலைவி கடவுளரைப் பரத்தையராகக் கூறுமென்பது கூறினாம்.

இஃது ஐஞ்சீரடுக்கி வெண்பாவாய்வந்து இடைநிலைப்பாட்டுப் பெற்று வருதலிற் கலிவெண்பாவுறுப்பொத்துப் பாவேறுபட்டு வந்த கொச்சகம். (28)

(94). என்னோற் றனைகொல்லோ
நீரு ணிழற்போ னுடங்கிய மென்சாய
லீங்குருச் சுருங்கி
யியலுவாய் நின்னோ டுசாவுவே னின்றீத்தை;

னும், நெட்டிருங் கூந்தற் கடவுளரையே கண்டா யென்று இல்லது சொல்லிக்காயுமாகலின் அப்பெயர்த்தாயிற்று” என்பர். பேர்; தொல். மெய்ப். சூ. 24. இ-வி. நூலாரும் இதன் முன் வாக்கியத்தை எழுதி இம்மெய்ப்பாட்டிற்கு இதனை மேற்கோள்காட்டினர்; இ-வி. சூ. 580.

1. “நீர் பலகான் மூழ்கி” (பு-வெ. வாகை. 14) “நெடுவரை யருவியாடி.......... புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே” (புறம். 251) என்னும் தாபதவாகைத்துறைச் செய்யுட்கள் இங்கே அறிதற்பாலன.

2. அகலமென்பது சூத்திரத்துப் பொருளைத் தூய்மைசெய்தற்குக் கடா விடையுள்ளுறுத்து உரைக்கும் உரையென்பர் இறையனாரகப் பொரு ளுரைகாரரும்.

3. தொல். வேற்றுமைமயங்கியல். சூ. 5.

4. தொல். அகத். சூ. 45; இச்சூத்திரத்தினுரையில் இவர் இச்செய்யுளை, காவற் பாங்கினாங்கோர் பக்கத்தில் தலைவன் கூறியவற்றைக் கற்பியலுள் தலைவன் பகுதியினீங்கிய தகுதிக்கண் தலைவி பரத்தையராகக் கூறியதற்கு மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்.

(பிரதிபேதம்)1கூறாமலாலுள்ள, 2விகற்பங்கள், 3மாட்சிமையென்னுஞ்.

`