பக்கம் எண் :

566கலித்தொகை

5அன்னையோ, காண்டகையில்லாக் குறணாழிப்போழ்தினா
னாண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை
வேண்டுவ லென்று விலக்கினை நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று;
9மாண்ட, எறித்த படைபோன் முடங்கி மடங்கி
நெறித்துவிட் டன்ன நிறையேரா லென்னைப்
பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறீஇ நிறுக்கல்லே
னீநல்கி னுண்டென் னுயிர்;
13குறிப்புக்காண், வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள கடும்பகல் வந்தெம்மை
யில்லத்து வாவென மெய்கொளீஇ யெல்லாநின்
பெண்டி ருளர்மன்னோ கூறு:
17நல்லாய்கேள், உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லி
னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ
பக்கத்துப் புல்லச் சிறிது;
22போசீத்தை,மக்கண் முரியேநீ மாறினித் தொக்க
மரக்கோட்டஞ்சேர்ந்தெழுந்தபூங்கொடிபோல
நிரப்பமில் யாக்கை தழீஇயினரெம்மைப்
புரப்பேமென் பாரும் பலராற் பரத்தையென்
பக்கத்துப்புல்லீயா யென்னுமாற் றொக்க
வுழுந்தினுந்துவ்வாக் குறுவட்டா நின்னி
னிழிந்ததோ கூனின்பிறப்புக் கழிந்தாங்கே
யாம்வீழ்து மென்றுதன்பின்செலவு முற்றீயாக்
கூனிகுழை யுங்குழைவுகாண்;
31யாமை யெடுத்து நிறுத்தற்றாற் றோளிரண்டும் வீசி
யாம்வேண்டே மென்று விலக்கவு மெம்வீழுங்
காமர் நடக்கு நடைகாண் கவர்கணைச்
சாமனார் தம்முன் செலவு காண்க;