35 | ஓஒகாண், நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணா முசாவுவங் கோனடிதொட் டேன்; | 37 | ஆங்காக, சாயலின் மார்ப வடங்கினேன் ஏஎ பேயும் பேயுந் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவ றண்டாத் தகடுருவ வேறாகக் காவின்கீழ்ப் போத ரகடாரப் புல்லி முயங்குவேந் துகடபு காட்சி யவையத்தா ரோலை முகடுகாப் பியாத்துவிட் டாங்கு. |
இஃது “அடியோர் பாங்கினும் 1வினைவலர் பாங்கினுங், கடிவரை யிலபுறத்தென்மனார் புலவர்” (1) என்பதனால் அடியோராகிய கூனுங்குறளும் உறழ்ந்து 2கூறிக்கூடியது. இதன்பொருள். | என்னோற் றனைகொல்லோ நீரு ணிழற்போனுடங்கிய மென் 3சாய 4லீங்குருச் சுருங்கி யியலுவாய் நின்னோ டுசாவுவேனின்றீத்தை |
1. தொல். அகத். சூ. 25. (அ) இச்சூத்திரத்தின் உரையில் ‘அடித்தொழில் செய்வாரும் வினைசெய்வாரும் அகத்திணைக்குரியரல்லர்; அகத்திணையாவது. அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல்வேண்டும். அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்த லரிதாகலானும் அவர் நாணுக் குறைபாடுடையராதலானும் குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவ ராதலானும் இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதாரென்பதனானும் இவர் புறப்பொருட்குரியர்’ என்று கூறி, இச் செய்யுளை மேற்கோள்காட்டி, ‘இதனுள் ஒருவரையொருவர் இழித்துக் கூறினமையான் அடியாரென்பதூஉம் மிக்க காமத்தின் *வேறுபட்டு (*வேட்டு என்றும் பிரதிபேதம்) வருதலாற் பெருந்திணைப்பாற் படுமென்பதூஉம் கண்டுகொள்க. இதுதானே கைக்கிளைக்கும் உதாரணமாம்’ என்றார் இளம்பூரணர்; (ஆ) "இழிகுலத்தார்க்கு அகப்புறக் கைக்கிளை உரித்தென்பதற்கு இதனை மேற்கோள் காட்டினர் நாற்கவிராச நம்பியென்பவர்; நாற்கவி. சூ. 242. (பிரதிபேதம்)1வினைவல பாங்கினும், வினைவர் பாங்கினும், 2கூடிக்கூறியது, 3சாயலினுஞ் சுருங்கி, 4ஈங்குச் சுருங்கி.
|