பக்கம் எண் :

576கலித்தொகை

(95). நில்லாங்கு நில்லாங் கிவர்தர லெல்லாநீ
நாறிருங் கூந்தலா ரிற்செல்வா யிவ்வழி
யாறு மயங்கினை போறிநீ வந்தாங்கே
மாறினி நின்னாங்கே நின்சே வடிசிவப்பச்
செறிந்தொளிர் வெண்பல்லா யாம்வே றியைந்த
குறும்பூழ்ப்போர் கண்டே மனைத்தல்ல தியாது
மறிந்ததோ வில்லைநீ வேறோர்ப் பது;
8குறும்பூழ்ப்போர்கண்டமை கேட்டே னீயென்றும்
புதுவன வீகை வளம்பாடிக் காலிற்
பிரியாக் கவிகைப் புலையன்றன் யாழி
னிகுத்த செவிசாய்த் தினியிளிப் பட்டன
வீகைப்போர் கண்டாயும் போறிமெய் யெண்ணிற்
றபுத்த புலர்வில புண்.
14ஊரவர்கவ்வை யுளைந்தீயா யல்கனின்
றாரின்வாய்க் கொண்டு முயங்கிப் பிடிமாண்டு
போர்வாய்ப்பக் காணினும் போகாது கொண்டோடும்
பார்வைப்போர் கண்டாயும் போறிநின் றோண்மேலா
மீரமாய் விட்டன புண்;
19கொடிற்றுப்புண்செய்யாது மெய்ம்முழுதுங் கையிற்
றுடைத்துநீ வேண்டினும்வெல்லாது கொண்டோடு
மொட்டியபோர் கண்டாயும் போறி முகந்தானே
கொட்டிக் கொடுக்குங் குறிப்பு;
23ஆயி னாயிழா யன்னவை யானாங் கறியாமை
போற்றிய நின்மெய் தொடுகு;
25அன்னையோ, மெய்யைப்பொய் யென்று மயங்கிய கையொன்
றறிகல்லாய் போறிகா ணீ;
27நல்லாய், பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தே னருளினி;
29அருளுகம் யாம்யாரே மெல்லா தெருள
வளித்துநீ பண்ணிய பூழெல்லா மின்னும்
விளித்துநின் பாணனோ டாடி யளித்தி