பக்கம் எண் :

578கலித்தொகை

எ - து: 1அதுகேட்ட தலைவன், செறிந்து விளங்குகின்ற வெள்ளிய பல் லினையுடையாய் ! யாம் புதிதாக வந்து பொருந்தின 2குறும்பூழ்ப்போர் கண்டேம்; அவ்வளவல்லது நீ எனக்குத் தீங்காகக் கருதும் ஒழுக்கஞ் சிறிதும் யான் அறிந்ததோ இல்லையென்றான். எ- று.

ஓகாரம், ஐயம்.

8குறும்பூழ்ப்போர் கண்டமை 3கேட்டேனீயென்றும்
புதுவன வீகை வளம்பாடிக் காலிற்
பிரியாக்கவிகைப் 4புலையன்றன் யாழி
னிகுத்தசெவிசாய்த் தினியினிப் பட்டன
வீகைப்போர்கண்டாயும் போறிமெய் யெண்ணிற்
றபுத்த புலர்வில புண்

எ - து: அதுகேட்ட தலைவி, நீ எந்நாளுங் குறும்பூழினது போரைக் கண்டபடியை யான் கேட்டேன்; அது கூறக் கேள்; ஒருநாட் 5கொடுத்தாற் போலன்றிப் புதிய வாயிருக்கின்ற கொடையினது பெருமையைப் பாடி நின்னி டத்தினின்று நீங்காத, யாழ்வாசித்தலாற் கவிழ்ந்த கையினையுடைய பாணன் தன்னுடைய யாழோசையாலே முன்பு தாழ்க்கப்பட்ட செவிகளை அவன் 6கூறுகின்றவற்றைக்கேட்டற்கு அவர்சாய்க்கையினாலே இப்பொழுது அக்கூற்றாலே புதிதாக அகப்பட்டனவாகிய பூழினுடைய புதிய போர்களைக் கண்டாயும்போலே இருந்தாய்; அதனை உண்மையாக எண்ணிற் புலர்ச்சி யிலவாகிய புண்கள் உன்னைக்கொன்றன; இதனை ஆற்றியவா றென்னென்றாள். எ - று.


(ஆ) அது கோழியும் சிவற் (செவ்வல்) காடையும் கவுதாரியும் போலப் போர்த்தொழிலிற் சிறந்த பறவை யென்பது, “கறுவொடு மொன்றோ டொன்று காரணமின்றிச் சீறிப், பொறியுடைக் குறும்பூழ் தம்மிற் போர்செயப் பொருத்து மோதை, செறிமயிர்த் தகர்க டம்மிற் றீயெழத் தாக்க னோக்கி, யறைகழல் வீர ரார்க்கு மமலையை யவிக்குமன்றே” என்பதனாலும். (இ) அதன் போர் காணல் ஆடவர்க்குரியமரபென்பது, இச்செய்யுளாலும் “கலையின் வென்றியுங் கரிபரி யிரதமே காலாண், மலையும் வென்றியுஞ் சூட்டுடை வாரணங் குறும்பூ, ழுலையமோதுவன் கடாப்பிற போரிடை யுறுத்திக், குலவும் வென்றியுங் கொண்டன வாடவர் குழுக்கள்” என்பதனாலும் அறியலாகும். (ஈ) குறும்பூழ் என்பது ஒரு பறவைச்சாதிப் பெயரென்றும், இனஞ்சுட்டியதன்றென்றும் கூறுவர் ஓருரைகாரர்; தொல். கிளவி. சூ. 18. குறும்பூழ், காடையென்று வழங்கப்படும்.

(பிரதிபேதம்)1இதுகேட்ட, 2குறும்பூழினதுபோரை, 3கேட்டனன், 4புலைவன், 5கொடுத்தாப்போலன்றி, 6கூறுகின்றனவற்றைக்.