பக்கம் எண் :

580கலித்தொகை

தசை கரையும்படி கையாற் பிடித்தலாலே மாட்சிமைப்பட்டுத் தனக்கு மாறாகிய பூழின் போரை வாய்ப்பக் காணினும் அதற்கு அஞ்சிப் போகாதே போர் செய்தலைத் தன்னிடத்தேகொண்டு 1பின்னும் போர்செய்யும் பார்வையாகிய பூழின் போரைக் 2கண்டாயும்போறியென வேறுமோர் பொருள் தோன்றி நின்றவாறு காண்க.

19கொடிற்றுப்புண் செய்யாது மெய்ம்முழுதுங் கையிற்
றுடைத்துநீவேண்டினும் வெல்லாது 3கொண்டாடு
மொட்டியபோர்கண்டாயும் போறி (1) முகந்தானே
கொட்டிக் கொடுக்குங் குறிப்பு

எ - து: இவட்கு வருத்தமாகவுங்கூடுமென்றுகருதிப் புணர்ச்சிக்காலத்துக் கவுளிடித்துச் செய்யும் வடுக்களையுஞ் செய்யாமல் மெய்ம்முழுதையும் கையாலே எப்பொழுதுந் தடவி நீ விரும்பினும் நீ தன்னை வெல்லாமற்கொண்டு புணரும் ஒட்டுதலையுடையாளது கலவிப்போரைக் கண்டாயும் போலே இருந்தாய்; நின் மனக்குறிப்பை நின் முகந்தானே 4காட்டிக் கொடாநிற்குமென்றாள், எ - று.


1. (அ) “முன்னங்காட்டி முகத்தினுரையா” (ஆ) “முன்ன முகத்தினுணர்ந்து” (,இ) “ஒருவன், முகனுரைக்கு முண்ணின்ற வேட்கை” (ஈ) “முன்ன, முகம்போல முன்னுரைப்ப தில்”. (உ) அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங், கடுத்தது காட்டுமுகம்”. (ஊ) “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங், காயினுந் தான்முந் தறும்”. (எ) “முகநோக்கி, நிற்க வமையு மகநோக்கி, யுற்ற துணர்வார்ப் பெறின்". (ஏ) “ஒளிப்பினு, முள்ளம் படர்ந்ததே கூறுமுகம்" (ஐ) “நோக்கி யறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி, நோக்கி யறிப வதுவே போ - னோக்கி, முகனறிவார் முன்ன மறிப" (ஒ) "முகத்தினாற் பொருண்முடிவு கண்ணினான்" (ஓ) “துாத னின்முகப் பொலிவி னாற் சுடர்க் காது வேலினான் கருமமுற்றுற, வோதி ஞானிபோ லுணர்ந்த பின்” (ஒள) "நோக்கின னவர்முக நோக்க நோக்குடைக், கோக்கும ரருமடி குறுக" (ஃ) "அற்றந்தான், மனங்கள் போல முகமு மறைக்கு மே" (அஅ) ”சிந்தை யுண்ணெனடுஞ் சீற்றந் திருமுகந், தந்தளிப்ப" (ஆஆ) “அகத்தியன் முகத்திற் காட்ட” (இஇ) “முழையுறு சீய மன்னான் முகத்தினா லகத்தை நோக்கிக், குழையுறுமெய்யன் பைய வரன் முறை கூற லுற்றான்” (ஈஈ) ”உளத்தனவாண் முகத்தனவா யுதிக்கு மவை குறிப்பினாற், றெளித்துரைத்ததல் சீர்மைத்தே” (உஉ) “உள்ள முகத்திற் சுடர்கிற்ப” (ஊஊ) “அகத்தி னழகு முகத்திற்றெரியும்.”

(பிரதிபேதம்)1பின்னும்பின்னும்போர், 2கண்டாய்போறி, 3கொண்டோடும், 4கொட்டிக்.