தான் விரும்பிய நீர்விளையாட்டுமுதலியவற்றிலே உன்னை ஒட்டுதலையுடையாள். இனி மருந்திடுதற்குச் செவியின் மயிரைப் பறிக்குங்காற் புண்ணாகப் பறியாதே மெத்தெனப் பறித்து மெய்யைமுழுக்கப் பலகாற்றுடைத்து நீ இவ்வாறு 1கொண்டாடினுந் தான் எதிர்ந்த பூழினை வெல்லாமல் அப்பூழினைக்கொண்டு போர்செய்யும் (1) இயக்கனாகிய பூழின் போரைக் கண்டாயும் போறியென வேறுமொரு பொருள்தோன்றி நின்றவாறு காண்க. 23 ஆயி னாயிழா யன்னவை யானாங் கறியாமை 2போற்றியநின்மெய் தொடுகு எ - து: அதுகேட்டதலைவன், அப்படியாயின், ஆயிழாய்! நீ கூறுகின்ற அத்தன்மையவான குறிகளை யான் அவ்விடங்களிற் செய்தறியாமையை நின் னெஞ்சிடத்தே போற்றுதற்கு நின் மெய்யைத் தொட்டுச் சூளுறுவேனென்றான். எ - று. தொடுமென்றும் பாடம். 25 அன்னையோ எ - து: அதுகேட்ட தலைவி, 3அம்மையோவென இகழ்ந்து கூறினாள். எ - று. மெய்யைப்பொய் யென்று மயங்கிய கையொன் றறிகல்லாய் போறிகா ணீ எ - து: அதுகேட்ட 4தலைமகன், யான் கூறுகின்ற மெய்யைப் பொய்யென்று மயங்கிய நீ உலகவொழுக்க மொன்றும் அறியாய்போலே இருந்தாய் காணென்றான். எ - று. 27 நல்லாய், (2) பொய்யெல்லா மேற்றித் தவறு (3) தலைப்பெய்து கையொடு 5கண்டாய் பிழைத்தே னருளினி
1. இயக்கன்-இயக்குபவன்; "இயக்கலி னியக்கி யாகுமே” சீவக. 1015. 2. (அ) "பொய்யெல்லா மேற்றி...............அருளினி” என்பதை இவ்வுரைகாரர் (தொல் கற்பி. சூ, 5.) மேற்கோள் காட்டி, இது தலைவன் நின்றுநனி பிரிவி னஞ்சிய பையுளில் அடங்குமென்றார். (ஆ) “பரத்தையி னகற்சியிற் பிரிந்தோட்குறுகி, யிரத்தலுந் தெளித்தலும்” என்பதன் உரையில், இப்பகுதியை இரத்தற்கு மேற்கோள்காட்டினர் இளம்பூரணர்; தொல். அகத், சூ, 44, ‘ஒன்றாத் தமரினும்’ 3. (அ) "பண்டு மொருகாற் கண்டகத் தடக்கிய, வையப் பரத்தையைக் கையொடு கண்டே, மினிப்பொய் யுண்ணு மேழைய மல்லம்” (பிரதிபேதம்)1கொண்டாடிற்றுத் தானெதிர் பூழினை வெல்லாமல் பூழினைக், 2போற்றியர் நின்மெய், 3அம்மேயோவென, 4தலைவன், 5கண்டை.
|