பக்கம் எண் :

582கலித்தொகை

எ - து: பின்னும் நல்லாளே! யான் 1செய்த தவறுகளை என் தலையிலே 2யிட்டு என் பொய்களையெல்லாம் எனக்கு ஏறத் தெளிவித்து என் களவைக் கையோடே பிடித்துக்கொண்டாய்; யானும் நின்னைத் தப்பினேன்; இனி எனக்கு அருளென்றான். எ - று.

29 3அருளுகம் யாம்யாரே மெல்லா தெருள
வளித்துநீபண்ணிய பூழெல்லா மின்னும்
விளித்துநின்பாணனோ டாடி 4யளித்தி
(1)விடலைநீ 5நீத்தலினோய்பெரி தேய்க்கு
நடலைப்பட் டெல்லாநின்பூழ்

எ - து; அதுகேட்டு அவள், ஏடா! யாம் நீ கூறியவாறே 6அருளுவேம்; அங்ஙனம் அருளுதற்கு யாம் யாராந்தன்மையையுடையேம்? விடலாய்! நின் பூழெல்லாம் நீமுன்னர் அளித்துப் பின்னர்க் கைவிடுதலின்
7நின்னடிப்பிலே அகப்பட்டு நோயைப் பெரிதாகப் பொருந்தும்; அவை வருந்தாதபடி நீ உனக்கு ஆம்படி பண்ணின பூழெல்லாவற்றையும் இன்னும் நின் பாணனாலே அழைத்துவிட்டு அவற்றின்மனந்தெளியும்படி அளித்து
8ஆடுவாயாக வென்றாள். எ - று,

எனவே, பரத்தையர்க்கும் பூழிற்கும் ஏற்ப நின்றது.

இதனால், இருவர்க்கும் புணர்வாகிய உவகைபிறந்தது.

"கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி, யடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காத லெங்கையர் காணி னன்றென, மாதர் சான்ற வகையின் கண்ணும்” (2) என்றதனான் அருளினியென அடிமேல் வீழ்ந்தவாறும்,
9அருளுகம் யாம்யாரேமெனக் காதலமைந்தவாறும், அளித்தியெனப் பணிவை நின் பெண்டிர் கொள்வரென்றவாறுங் காண்க.


பெருங். (1) 40: 465 - 467. (ஆ) "தான்முன் கண்ட தவற்றின ளாதலிற், சென்ற வாயிற் கொன்றல ளூடி” பெருங். (1) 37 : 167 - 168.

1. “பரத்தையி னகற்சியிற் பிரிந்தோட் குறுகி, யிரத்தலுந் தெளித்தலும்” என்பதனுரையில் ‘விடலை நீ நீத்தலின்..............நின்பூழ்’ என்பதை மேற்கோள்காட்டி, இதில் மருதநிலத்திற்றலைமகன் விடலை யெனப்பட்டா னென்பர் இளம்பூரணர்; தொல். அகத். சூ. 44. ‘ஒன்றாத்தமரினும்’

2. தொல். கற்பி. சூ, 6. இச்சூத்திரப்பகுதியி னுரையில் (அ) ‘நல்லாய்..................பூழ்’ என்பதை மேற்கோள்காட்டி, “இதனுட் கையொடு கண்டாய் பிழைத்தேனருள்’ என அடிமேல்வீழ்ந்தவாறும்

(பிரதிபேதம்) 1செய்யாத, 2இட்டெனப்பொய்களை, 3அருளுக யாம்யாரே யெல்லா, 4அளித்துவிடலை, 5நீக்கலின், 6அருளுகம் அங்ஙனம், 7அந்நடிப்பிலே, 8ஆளுவாயாக, 9அருளுகம் யாரெனக்காதலமைந்தவாறும் காண்க. இது.