பக்கம் எண் :

மூன்றாவது மருதம்583

இது பல கொச்சகங்களும் வருதலிற் கலிவெண்பா வுறுப்பின் வேறு பட்டு வந்த கொச்சகக்கலி. (30)

(96). ஏந்தெழின் மார்ப வெதிரல்ல நின்வாய்ச்சொற்
பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை
சாந்தழி வேரை சுவற்றாழ்ந்த கண்ணியை
யாங்குச்சென் றீங்குவந் தீத்தந்தாய் கேளினி
5ஏந்தி, எதிரிதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்
குதிரை வழங்கிவரு வல்;
7அறிந்தேன்குதிரைதான்
பால்பிரியா வைங்கூந்தற் பன்மயிர்க் கொய்சுவன்
மேல்விரித்தியாத்த சிகழிகைச் செவ்வுளை
10நீல மணிக்கடிகை வல்லிகை யாப்பின்கீழ்
ஞாலியன் மென்காதிற் புல்லிகைச் சாமரை
மத்திகைக் கண்ணுறை யாகக் கவின்பெற்ற
வுத்தி யொருகாழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி நேர்முக்காழ்ப்பல்பல கண்டிகைத்
15தார்மணிபூண்ட தமனிய மேகலை
நூபுரப் புட்டி லடியொ டமைத்தியாத்த
வார்பொலங் கிண்கிணி யார்ப்ப வியற்றிநீ
காதலித் தூர்ந்தநின் காமக் குதிரையை
யாய்சுதைமாடத் தணிநிலா முற்றத்து
20ளாதிக்கொளீஇய வசையினை யாகுவை
வாதுவன் வாழிய நீ;

‘அருளகம் யாம் யாரேம்’ எனக் காதலமைந்த வாறும் நீ நீத்தலின் பூழெல்லாம் நடலைப்பட்டு நோய்பெரி தேய்க்கும், அவற்றைஇன்னும்விளித்து நின் பாணனோடு ஆடியளித்துவிடு என இப்பணிதல் நின் பெண்டிர்க்கு நன்றாமென்றவாறும் கூறியவாறு காண்க. ஈண்டுப் பூழென்றது, குறிப்பினாற் பரத்தையரை’’ என்பர். இளம்பூரணர்; ‘அவனறிவு’ (ஆ) நச்சினார்க்கினியர் ‘‘மெய்யைப் பொய்யென்று..................பூழ்’’ என்றபகுதியை மேற்கோளாகக்காட்டி,இங்கே தாமெழுதியிருக்கும் விசேடக் குறிப்பையும்எழுதியிருக்கிறார்.