| 22 சேகா, கதிர்விரி வைகலிற் கைவாரூஉக் கொண்ட மதுரைப் பெருமுற்றம் போலநின் மெய்க்கட் குதிரையோ வீறி யது; | | 25 கூருகிர் மாண்ட குளம்பி னதுநன்றே கோரமே வாழிகுதி ரை; | | 27 வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்திக் குதிரை யுடலணி போலநின் மெய்க்கட் குதிரையோ கவ்வி யது; | | 30 சீத்தை, பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே வியமமே வாழிகுதி ரை; | | 32 மிகநன், றினியறிந்தே னின்றுநீ யூர்ந்த குதிரை பெருமணம் பண்ணி யறத்தினிற் கொண்ட பருமக் குதிரையோ வன்று பெருமநின் னேதில் பெரும்பாணன் றூதாட வாங்கேயோர் வாதத்தான் வந்த வளிக்குதிரை யாதி யுருவழிக்கு மக்குதிரை யூரனீ யூரிற் பரத்தை பரியாக வாதுவனா யென்றுமற் றச்சார்த் திரிகுதிரை யேறிய செல். |
1இது ‘‘கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு 2தொகைஇப் பகுதியி னீங்கிய தகுதிக்கண்’’ (1) 3தலைவி பரத்தையரைக் குதிரையாக்கிக் கூறியது. இதன் பொருள்.
1. (அ) தொல். கற்பி. சூ. 6. இச்சூத்திரப் பகுதியினுரையிலும் நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டி, ‘‘இதனுள் பாணன் தூதாட வாதத்தால் வந்த குதிரை யென்பதனால், அவன் கூட்டிய புதிய பரத்தையர் என்பதூஉம் அவன் பகுதியினின்று நீங்கியவாறும் குதிரையோ வீறியதென்பது முதலியவற்றாற் கொடுமை நெஞ்சைச் சுடுகின்றவாறும் அதனை நீக்கிய பரத்தையரைக் குதிரையாகக்கூறித் தானதற்குத் தக்குநின்றவாறுங் காண்க’’ என இதனிறுதியிலுள்ள குறிப்புக்குச் சிறிதுவேறுபட ஒரு குறிப்பும் எழுதியுள்ளார். (ஆ) இந்நூற்பக்கம் 577 : 2 - ஆம் குறிப்புஇங்கும் அறியத்தக்கது. (பிரதிபேதம்)1இது பகுதியினீங்கிய, 2தொகைஇயபகுதி, 3தலைவிகூறியது.
|