(1) | ஏந்தெழின் மார்ப வெதிரல்ல நின்வாய்ச்சொற் (2)பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா 1மைந்தினை சாந்தழிவேரை சுவற்றாழ்ந்த கண்ணியை யாங்குச்சென்(3) றீங்கு 2வந் தீத்தந்தாய |
எ - து: உயர்ந்த அழகினையுடைய மார்பனே! நின் வாயிற்சொல் நினக்கு மாறல்ல; நின் தன்மைகண்டு வினாவுகின்றேன்; நீ மடிவிரிந்து கரை யற்று முசிந்த (4) 3புடைவையையுடைய அமையாத வலியினையுடையை; சந்தனம் அழிதற்குக் காரணமான 4வேர்வையையுடையை; தோட்கட்டிலே கிடந்து நிறங்குறைந்த கண்ணியையுடையை; ஆகையினாலே எவ்விடத்தே சென்று இவ்விடத்தே வந்தா 5யென்றாள். எ - று. 4 கேளினி ஏந்தி, (5) எதிரிதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய் குதிரை வழங்கிவரு வல் 6எ - து: அதுகேட்ட தலைவன், யான் கூறுகின்றதனை இப்பொழுது கேள்; உயர்ந்து தன்னில் இணையொத்த நீலப்பூவைத் தொடுத்தாலொத்த கண்ணினையுடையாய்! குதிரையேறி வருவேனென்றான். எ - று.
1. ‘‘ஏந்தெழின் மிக்கான்’’ 2. (அ)ஆய்தலென்பது உள்ளத னுணுக்கமாகிய குறிப்புணர்த்து மென்பதற்கு, இவ்வடி மேற்கோள்; தொல். உரி. சூ. 34 சேனா; சூ. 26. ‘ஓய்தல்’ தெய்வச். சூ. 32. நச்; நன். உரி. சூ. 18. இரா; இ-வி. சூ. 281. (ஆ) ‘‘பாய்ந்தாய்ந்த மா’’ பதிற். 69 : 7. 3. ‘‘ஈங்குவந் தீத்தந்தாய்’’ என்பது முன்னிலை முற்று வினைத்திரிசொல் லுக்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 61. நச். 4. புடைவையென்பது ஆண்பாலாருடைக்கும்பெயராய்ப், பண்டுவழங்கிற்றென்பது; முல்லைப். 59. மது. 598. பு - வெ. வாகை. 14; பெருந். பெண்பாற். 18. உரையாலும், ‘‘மெய்தருவா னெறியடைவார் வெண்புடைவைமெய்சூழ்ந்து’’ என்னும்சேக்கிழார்செய்யுளாலும் அறியலாகும். 5. (அ) "நீலத், தெதிர்மலர்ப் பிணைய லன்னவிவ, ளரிமதர் மழைக்கண்” (ஆ) "நெடு நீர் பயந்த நிரையிதழ்க் குவளை, யெதிர்மல ரிணைப்போ தன்னதன், னரிமதர் மழைக்கண்” எனவும், (இ) "மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண்” (ஈ) "மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன, (பிரதிபேதம்) 1மைந்தினைச் சாந்தழி, 2வந்தீத்தாய் கேளினி: எ - து, 3புடவை யோடே அமையாத, 4வேர்ப்பையுடையை, 5என்றாள் பின்னர்த்தலைவன்யான் கூறுகின்றதனை இப்பொழுதுகேள் ஏந்தி, 6எ - து: உயர்ந்து தன்னில்.
|