7 | அறிந்தேன்குதிரை 1தான் பால்பிரியா (1)வைங்கூந்தற் பன்மயிர்க் கொய்சுவன் மேல்விரித்தியாத்த சிகழிகைச் செவ்வுளை | 10 | நீல மணிக் (2) கடிகை வல்லிகை யாப்பின்கீழ் ஞாலியன் மென்காதிற் புல்லிகைச் சாமரை 2மத்திகைக் கண்ணுறை யாகக் கவின்பெற்ற வுத்தி யொருகாழ்நூ 3லுத்தரியத்திண்பிடி நேர்மணி நேர்முக்காழ்ப் பல்பலகண்டிகைத் | 15 | தார்மணிபூண்ட தமனிய மேகலை நூபுரப் புட்டி லடியொ டமைத்தியாத்த வார் 4பொலங் கிண்கிணி யார்ப்ப 5வியற்றிநீ காதலித் தூர்ந்தநின் காமக் குதிரையை யாய்சுதை மாடத் தணிநிலா முற்றத்து | 20 | ளாதிக் 6கொளீஇ யசையினை யாகுவை வாதுவன் வாழிய நீ |
மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு” (உ) "தூமலர்த் தாமரைப் பூவினங்கண், மாயிதழ்க் குவளை மலர்பிணைத் தன்ன, திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்” (ஊ) "குவளையின் பிணையல் செற்று.................செவ்வரிபொதிந்த வாட்கண்” (எ) “கொங்கிவருங் கருங்குழலி பெருந்தடங்க ணிருங்குவளைப், பிணையல் போல.............திளைத்த வன்றே” எனவும் (ஏ) "முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளி, னெதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும்” (ஐ) "கண்ணே, புகழ்சா றாமரை யலரிணைப் பிணையல்” எனவும் வருவனகாண்க. 1. (அ) "ஐங்கூந்த லுளர” கலி. 105 : 53. (ஆ) “நாறைங் கூந்தற்..............மகளிர்க்கு” (இ) “இருளைங் கூந்த லின்றுயில்” (ஈ) "சில்லைங் கூந்தல்” அகம். 65 : 18 ; 20 ; 233: 15 ; 261 : 3. (உ) "நாறைங் கூந்த னணித்தென” (ஊ) "புயலைங் கூந்தல்” (எ) "நாறைங் கூந்த னடுங்குதுய ரெய்த” சிலப். 10 : 43 ; 11 : 109, 15: 97. 2. களிகையென்பது, கடிகையெனத் திரிந்துநின்றது; களிறு கெளிறென்பன கடிறு கெடிறெனத் திரிந்து வருதலுங் காண்க; வடமொழியில் திரிந்துவந்ததென்றலுமாம். “கண்ணார் களிகை” “திருக் (பிரதிபேதம்)1தான் எ - து: அதுகேட்டதலைவி நீ ஏறின குதிரைதான் யானறிந்தேன் அதனைக்கேள் பால்பிரியா, 2மத்திகைக்கண்ணுறை, 3உத்திரியத், 4பொலக்கிண்கிணி, 5பயிற்றிநீ, 6கொளீஇய வசைவினை யாகுவா யாதுவன்.
|