1எ - து: இதுகேட்ட தலைவி, நீ ஏறின குதிரைதான் யானறிந்தேன்; அதனைக்கேள்; ஐம்பாற் பகுதி நீங்காத ஐந்துவகையினையுடைய கூந்தலாகிய பலமயிர்களைப் பலகாலுங் கத்திரிகையிடுங்(1) 2கேசாரியின் மயிரினையும், மயிர்முடியின்மேலே விரித்து நிலைபெறுத்தின 3துஞ்சாகிய சிவந்த தலையாட்டத்தினையும், 4நீலமணியைத் தோலிலேவைத்துத் தைத்துச்செய்த, கட்டுவடமாகிய கழுத்திற் கட்டுதலையுடைய 5வல்லிகையினையும், மெல்லிய காதிற்கிடக்கும் (2)புல்லிகையென்னும்பூணாகிய கீழேநாலும் இயல்பையுடைய (3) கன்ன சாமரையினையும், (4) தெய்வவுத்தியென்னும்பூணினருகே துவக்கி ஒருவடமாய் நாலுஞ் சுட்டியாகிய, குதிரை கண்ணாற்கண்டு அஞ்சும்படியாக விட்டுவைத்த அழகுபெற்ற (5) சம்மட்டியினையும், நூலாற்செய்யப்பட்ட
கேழ்க் களிகை” என்பவை பெருங்கதை. இதனைக் கண்டிகையின் சிதைவென்பாருமுளர். 1. கேசாரியென்பது, இங்கே குதிரையின் பிடரிக்குப் பெயராய் வந்துள்ளது; கேசரம் - பிடரிமயிர்; அம்மயிரையுடைமையால் இதற்குக் கேசரியென்று பெயராகி அது இடையே நீண்டுவந்ததுபோலும்; வட மொழியில் குதிரைக்குக் கேசரியென்ற பெயர் சிறுபான்மை வழங்கு மென்ப. கேசாரியென்னுஞ் சொல் "சுவல்” (மது. 391.) என்பதற்கும் ‘உளை’ (நெடுநல். 93) என்பதற்கும் பொருளாக இவ்வுரைகாரரால் ஆளப்பட்டிருக்கிறது. 2. புல்லிகை - கன்னப்பூவென்னும் அணிகலம்; குடைக்கடுக்கனெனினும் வாளியெனினும் பொருந்தும். 3. கன்ன சாமரை - குதிரையின் காதிலணியும் சாமரை. 4. (அ) “தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்து” முருகு. 23; (ஆ) “தெய்வ வுத்தியொடு செழுநீர் வலம்புரி.................மையீ ரோதிக்கு மாண்புற வணிந்து” சிலப் 6: 106 - 108. 5. சம்மட்டி - சவட்டை; இது சாட்டையென வழங்கும்; சவுக்கென்பதும்இது. நன்றாக அடிப்பது (அடித்து ஓட்டுவது) என்னும் பொருட்டாகிய ஸம்மர்த்தியென்னும் வழக்காறற்ற வடசொற்சிதைவுபோலும்; மத்திகையென வருதலும்நோக்குக. இச்சொல் மலையாளத்திலும் சம்மட்டியென்றேவழங்கும்; கன்னடத்தில் ‘சம்மட்டிகெ’ என ஒருசொல் உண்டென்றும் அதுசர்மபட்டிகையென்பதன் திரிபென்றும் கூறுவர். (பிரதிபேதம்)1எ - து: பால்பிரிசுவல் - ஐம்பாற்பகுதி, 2கேதாரியின்மயிரினையும் சுவலாகுபெயர்; சிகழிகை மேல்விரித்தியாத்த செவ்வுளை- மயிர்முடியின், 3(‘குஞ்சியாகிய’ என்பது முன்பதிப்பு), 4நீலமணிக்கடிகை யாப்பின் வல்லிகை - நீலமணியாற் செய்த, 5வல்லிகை யினையும்; அது நீலமணியைத் தோலிலே வைத்துத் தைத்தது. மென்காதிற் புல்லிகைக்கீழ் ஞாலியல் சாமரை - தண்டுமெல்லிய காதிற்.............கன்னசாமரையும், உத்தியொருகாழ் கண்ணுறை யாகக்கவின் பெற்ற மத்திகை - தெய்வவுத்தியென்னும் .....................................சம்மட்டியினையும், நூலுத்திரியத்திண்பிடி - நூலாற் செய்யப்பட்ட.
|