உத்தரியமாகிய திண்ணிய (1) 1குசையினையும். இனமொத்த மணிகளாற்செய்த தன்னிலொத்த முக்கண்டன் கட்டுவடமாகிய பலபலநிறத்தையுடைய 2கண்டிகையினையும், பொன்னாற்செய்த மேகலையாகிய கழுத்திலே கட்டினசதங்கைத் 3தண்டையினையும், அடியிடத்தேசமைத்துக்கட்டின ஒழுகின பொன்னாற்செய்த (2) சதங்கையும் அடியிடத்தே சமைத்துக்கட்டின (3) சிலம்பாகிய (4) கெச்சையும் ஆரவாரிப்பச் செலுத்திநீகாதலித்து ஏறின விருப்பத்தையுமுடையகுதிரையைச் (5) செண்டு வெளியிலன்றி அழகினையுடைய சாந்து வாரின மாடத்தில் அழகினையுடைய (6) நிலாமுற்றத்தே (7) ஆதியென்னும் நெடுஞ்செலவை அதற்குக் கொளுத்தி இளைத்தாய்; ஆகையினாலே நீமேல் (8) நல்ல அரசவாரியனாகுவை: நீ வாழ்வாயாக வென்றாள் எ - று.
1. குசை - கடிவாளம்.; குதிரைக்கயி றென்றலுமாம். 2. “தாரும் புட்டிலு மரற்றுவ” சீவக. 1772. 3. நூபுரமும் சிலம்பும் வெவ்வேறணிகலமாகவும் கூறப்படும்; “நூபுரம் புலம்பிடச் சிலம்பு நொந்தழ” என வருதலும் காண்க. 4. கெச்சை, வாயில்லாச் சதங்கை யென்பர். 5. செண்டுவெளி-வையாளிவீதி; இது யானை குதிரைகளைப்பயிற்றுதற்கும் கடுகச்செலுத்துதற்கும் உரிய இடம். 6. நிலா முற்றம் - நிலவின்பயன்கொள்ளுதற் குரித்தாய் மேலே வேயாத மேற்றளம்; இது வடமொழியில் சந்திர சாலை யென வழங்கும்; வழக்கில் மொட்டை மாடியெனப்படும். 7. “அடிபடு மண்டிலத் தாதி போகிய, கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்” மது. 390 - 391. 8. ‘நல்ல வாசவாரியன்’ என்றே ஏடுகளிலிருப்பதை நோக்க, நல்ல வாசிவாரியனென்றிருக்க வேண்டுமோ வென்று உண்டான ஐயத்தை இச்செய்யுளின் ஈற்றயல் வரி உரையாகிய ‘நீ யாசவாரியனாய்’ என்ற தொடர் நீக்கி அரசவாரியனென்று துணியச்செய்தது. (பிரதிபேதம்)1குசையினையும், நேர்மணி.........................கண்டிகை - இனமொத்த. 2கண்டிகையினையும்;அது தோலிலே மூன்றுநிரையாகப் பலநிறத்து மணியைவைத்துத்தைத்துக் கழுத்திற்கட்டுவது; தமனிய மேகலை பூண்டமணித்தார் - பொன்னாற். 3தண்டையினையும், அடியொடமைத் தியாத்த நூபுரப்புட்டில் - அடியிடத்தே சமைத்துக்கட்டின சிலம்பாகிய கெச்சையும்; ஒடு, உருபுமயக்கம். அடியொ டமைத்தி யாத்த வார்பொலக்கிண்கிணி-அடியிடத்தே...........................சதங்கையும்; சதங்கை பரத்தைக்குங் குதிரைக்குமொக்கும். ஆர்ப்பவியற்றி - புட்டிலுஞ் சதங்கையும் ஆரவாரிப்பச் செலுத்தி யென்க. நீ காதலித்தூர்ந்த காமக்குதிரை - நீகாதலித்துப் புணர்ந்த நின்னுடைய காமத்தையுடைய பரத்தையை யெனவும் நீகாதலித்தேறின.............................. குதிரையெனவும் நின்றது. செண்டு வெளியிலன்றி........................ கொளுத்தவிளைத்தாயாகையினாலே.
|