ஆதி (1) மாதியென்பவற்றுள் ஆதி-நெடுஞ்செலவு. நீ காதலித்தூர்ந்தமயிர் முதலியவற்றையுடைய, காமக்குதிரையை ஆர்ப்ப இயற்றி ஆதிக் 1கொளீஇ அசையினை யென்க. சுவல், ஆகுபெயர். ஒடு, உருபுமயக்கம். சிகழிகைமேல் விரித்தியாத்த செவ்வுளையெனமாறுக. நீலமணிக்கடிகை யாப்பின்வல்லிகையென்க. மென்காதிற் புல்லிகைக்கீழ் ஞாலியல் சாமரை யெனவும், உத்தி யொருகாழ் கண்ணுறையாகக் கவின்பெற்ற மத்திகை யெனவுங் கூட்டுக. தமனிய மேகலைபூண்ட மணித்தாரெனமாறுக. கண்டிகை, தோலிலே மூன்று நிரையாகப் பலநிறத்து மணியைவைத்துத் தைத்துக் கழுத்திற் கட்டுவது. அடியொடமைத்தியாத்த என்பதனை வார்பொலங்கிண்கிணி நூபுரப் புட்டில் இரண்டற்குங்கொள்க. சதங்கை, பரத்தைக்குங் குதிரைக்கும் ஒக்கும். நீ காதலித்தூர்ந்த நின்காமக்குதிரை என்பதற்கு, நீ காதலித்துப் புணர்ந்த நின்னுடைய காமத்தையுடைய பரத்தை [யெனினுமாம்.] (எனவுங்கொள்க.) 22 சேகா, கதிர்விரி வைகலிற் கைவாரூஉக் கொண்ட மதுரைப் பெருமுற்றம் போலநின் மெய்க்கட் குதிரையோ வீறி யது எ - து: ஞாயிற்றின் கதிர் விரிகின்ற விடியற்காலத்தே கையிற் பிடித்த அலகாலே (2) துராலை வாருதல்கொண்ட மதுரையிற் பெரிய முற்றம்போல நின்மெய்க்கட் கீறியது 2குதிரையோ ? எ - று. | சேவகா, சேகா எனத் திரிந்து நின்றது; விகாரமெனினுமாம். 3வாருதலென அலகும் பெற்றது; வீறுதல் - கீறுதல். | 25 | கூருகிர் மாண்ட 4குளம்பி னதுநன்றே கோரமே வாழிகுதி ரை |
எ - து: அக்குதிரை கூரிய உகிராலே மாட்சிமைப்பட்ட குரத்தினை 5யுடையது; ஆதலின், மிகவுங் கொடிதே; 6அதனை ஏறுகின்ற நீ தப்பின்றி வாழ்வாயாக. எ - று.
1. மாதி - வட்டமாயோடல். 2. துரால் - செற்றை குப்பை. (பிரதிபேதம்)1கொளீஇயவசைவினையென்க. சேகா, சேவகாலென்பது...................விகாரமுமாம். கதிர்விரியாவைகலிற், 2குதிரையோ வாருதலென அலகும்பெற்றது வீறுதல், 3(வாரு வாரூஉவென அலகுபெற்றது என்பது முன்பதிப்பு), 4 குளம்பினது வன்றே, 5உடையதுவாதலின், 6 இதனை.
|