27 | வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் (1) குத்திக் குதிரை (2)யுடலணி போலநின் மெய்க்கட் குதிரையோ கவ்வி யது |
எ - து: மூங்கி (3) லுழக்காலும் நாழியாலும் (4) சேதிகையென்னும்பெயரை யுடையதொழில்களாக 1வண்ணங்களைத் தோய்த்துக்குத்தின குதிரையுடலிற் (5) பக்கரைபோல நின்மெய்க்கட்கவ்வியது குதிரையோ கூறாயென்றாள். எ - று. 30 | சீத்தை, பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே வியமமேவாழிகுதி ரை |
எ - து; சீ! கெட்டது; தனக்கொரு பயனின்றியிருக்க வடுப்படுத்தற்கு உரித்தல்லாத இடத்தே வடுப்படுத்திற்று; ஆதலால், இக்குதிரை பெரிதும் 2வியப்பே; அக்குதிரையை ஏறின நீ தீங்கின்றி வாழ்வாயாக. எ - று. வியவென்னும் உரிச்சொல் 3முதனிலையாகப்பிறந்து வியமமெனப் பெயர் படநின்றது; அம் அசை. உரிச்சொன் முதனிலையாக எல்லா நிலைகளும் பிறக்குமாறுணர்க. இனி விஷமமென்னும் வடமொழியென்பாரும் உளர். அது ஷ டகரம் பெற்றே வருமென உணர்க. “வேட்கை மறுத்துக் 4கிளந்தாங் குரைத்தன், மரீஇய மருங்கி னுரித்தென மொழிப” (6) என்பதனுள், ஒன்றெனமுடித்தலால், மரீஇயவாறு ஏனைய வற்றிற்குங்கொள்கவென்று அதனான் இழிந்தோர்கூற்றை உயர்ந்தோர் கூறுவன அமைத்தாம். அவை: வீறுதலுங் கவ்வுதலும்.
1. ‘குத்திக்குதிரை’ என்றே பிரதிகளிலுள்ளது; ‘குத்தின குதிரை’ என்னு முரையைநோக்க, ‘குத்தீ குதிரை’ என்றிருக்கலா மென்று தோற்றுகிறது. 2. “புடைப் போர்ப் புளகத் துடப்புமறை பருமத்து” பெருங். (1) 48 : 7. 3. உழக்கு நாழி யென்பவை முகத்தலளவைக் கருவிகள். 4. சேதிகையென்பது, யானைக்கு உரித்தாகக் காளிதாஸ மஹாகவியாற் கூறப்பட்ட பத்திச்சேதம்போலக் குதிரைக்கு உரித்தானதொரு சித்திர விசேடமாயிருக்குமென்று அறிஞர் கூறுகின்றனர். 5. பக்கரையென்பது குதிரைச்சேணமென்னும் பொருளினதாய், (சீவக. 1772. சூளா. கல்யாண. 14. அரசியற் 230.) செய்யுணடையிலும் (பெரும்பாண். 492; முல்லை. 72: நெடுநல். 179, சீவக. 567) உரை நடையிலும் பயின்று வருதல்காண்க. 6. தொல். பொருளி. சூ. 17. இச்சூத்திரத்தின் இவருரையிலும் இக்குறிப்போடு “குதிரையோ வீறியது” என்பது மேற்கோள். (பிரதிபேதம்)1வன்னங்களை, 2வியமமே இக்குதிரையை, 3முதனிலையாக எல்லா நிலை களும் பிறக்குமாறுணர்க. அதுவியமமெனப் பெயர்படநின்றது அம்மசை வியமென்னும் வடமொழி, 4கிளர்ந்தாங்கு.
|