பக்கம் எண் :

மூன்றாவது மருதம்591

32மிகநன், றினியறிந்தே னின்றுநீ யூர்ந்த குதிரை
பெருமணம்பண்ணி யறத்தினிற் கொண்ட
(1) பருமக் குதிரையோவன்று 1பெருமநின்
னேதில் பெரும்பாணன்றூதாட வாங்கேயோர்
2வாதத்தான் வந்தவளிக்குதிரை யாதி
யுருவழிக்கு மக்குதிரையூரனீ யூரிற் பரத்தை
பரியாக 3வாதுவனாயென்றுமற் றச்சார்த்
திரிகுதிரை யேறிய செல்

எ - து: இன்று நீ ஏறிய குதிரை மிகவும் 4நன்றாயிருந்தது; அதனை இப்பொழுதறிந்தேன்; அது 5தான் அறநூல் கூறிய வழியாற் பெரியமணஞ் செய்துகொண்ட (2) மேகலையையுடைய காமக்கிழத்தியாகிய குதிரையோ அன்று; பெருமா! பாண்டொழிற்கு ஏதிலனாகிய பெரிய பாணன் தூதாய்ச் (3) செல்ல, அவ்விடத்துப்பரத்தையருடனே உண்டான மாறுபாட்டாலேவந்த (4) காற்றுப்போற்கடிய குதிரை; அதுதான் நினது பழைய உருவை முற்கூறிய வாறே கெடுக்கும்; ஆதலால், அக்குதிரையை இனி ஏறாதேகொள்; அன்றி அப்பரத்தை குதிரையாக நீ அரசவாரியனாய் எநநாளும் 6ஏறில்மேல் ஈண்டுவாராக் கூற்றிலே திரி; இனி ஈண்டுத் 7தாழ்க்ககில்லாதே அக்குதிரையை ஏறுதற்குப் போவெனத் தலைவி புலந்து கூறினாள். எ - று.


1. பருமமென்பது, குதிரைச்சேணத்துக்குப்பெயராய்வருதல்: (நெடுநல். 179 நாலடி. 149. கள. 16. பெருங். (1) 48 : 7, (2) 18 : 15) இவற்றாலும் அறியலாகும்.

2. மேகலையுள், பருமமென்பது ஒன்று; அது பதினெட்டுக் கோவை யுடையது; “பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குல்” (முருகு. 146.) என்பதும் அதனுரையும் பார்க்க. பதினான்கு கோவையுடைய தென்று கூறுவாரும் உளர்.

3. ஆடுதலென்பது செல்லுத லென்னும் பொருட்டாய் வருமென்பதை, “நின்றூதாடித் துறைச்செல்லால்” கலி. 72 : 13. என்பதனாலும் இந்நூற்பக்கம் 435 : 4-ஆம் குறிப்பாலும் அறிக.

4. (அ) “கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவி” (ஆ) “கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி” (இ) “காற்கடுப் பன்ன கடுஞ்செல லிவுளி” (ஈ) “காலியக்கன்ன கதழ்பரி” (உ) “காலியற்புரவி” (ஊ) “வளிநடந் தன்ன வாச்செல லிவுளியொடு” (எ) “காலியற் கலிமா” (ஏ) “வளிதொழி லொழிக்கும் வண்பரிப்புரவி” (ஐ) “காலிய லிவுளி”

(பிரதிபேதம்) 1 பெருமானின், 2 வாதத்தால், 3வாதுவனாய்மற்றச்சார், 4நன்றாயிருந்ததனை, 5தானநூல், 6ஏறிஈண்டு, மேல்ஈண்டு, 7தாழ்க்கநில்லாதே.