இதனுட் (1) ‘பாணன்றூதாடவந்த’ என்றதனான் அவன் கூட்டிய புதிய பரத்தையரென்பதூஉம் ‘அறத்தினிற்கொண்டகுதிரையோவன்று’ என்பதனால், காமக்கிழத்தி யன்றென்பதூஉம் அவன் பகுதியி னீங்கியதூஉம் மேனியில் வடுக்கள் நெஞ்சினைச் சுடுகின்றதூஉம் பரத்தையரைக் குதிரையாகக் கூறித் தான் அதற்குத் தக்குநின்றதூஉங் கூறியவாறுணர்க. “மரபுநிலை திரியா 1மாட்சிய” (2) என்பதனால், தலைவி அங்ஙனங்கூறும்வழுஅமைத்தாம். இதனுள் மடன் அழிந்த 2வழுவமைதி, “தன்வயிற் கரத்தலு மவன்வயின் வேட்டலு, மன்ன விடங்க ளல்வழி யெல்லா, மடனொடு நிற்றல் கடனென மொழிப” (3) என்பதனுள் அமைத்தாம். இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது. இது 3சொற்சீரடி பெற்று ஐந்சீரடுக்கிவந்தகலி வெண்பா. (31) (97). | அன்னை கடுஞ்சொ லறியாதாய் போலநீ யென்னைப் புலப்ப தொறுக்குவேன் மன்யான் சிறுகாலை யிற்கடை வந்து குறிசெய்த வவ்வழி் யென்றும்யான் காணேன் றிரிதர வெவ்வழிப் பட்டாய் சமனாக விவ்வெள்ளல்; | 6 | முத்தேர்முறுவலாய் நம்வலைப் பட்டதோர் புத்தியானைவந்தது காண்பான்யான் றங்கினேன்; | 8 | ஒக்கும்; அவ்வியானை வனப்புடைத் தாகலுங் கேட்டேடன் அவ்வியானைதான், சுண்ணநீ றாடி நறுநறா நீருண் டொண்ணுதல் யாத்த திலக வவிரோடைத் தொய்யில் பொறித்த வனமுலை வான்கோட்டுத் தொய்யகத் தோட்டிக் குழைதாழ் வடிமணி |
1. இந்நூற்பக்கம் 584 : 1 - ஆம் குறிப்புப் பார்க்க. 2. தொல். அகத், சூ, 45; இந்நூற்பக்கம் 577; 2-ஆம் குறிப்புப்பார்க்க, 3. தொல். பொருளி. சூ. 11. இச்சூத்திரத்தின் இவருரையில், “இவ்வீரிடத்தும் மடனழிதலுடையளென வழுவமைத்தார்; அது ‘குதிரைவழங்கி வருவல்’ என்று அவன் கரந்தவழி அதனை மெய்யெனக் கோடலன்றே மடமை; அங்ஙனங் கொள்ளாது ‘அறிந்தேன் குதிரைதான்’ எனப் பரத்தையர்கட் டங்கினாயெனக் கூறுதலின், இது மடனழிந்த வழுவமைதியாயிற்று” என்னுங் குறிப்புக் காணப்படுகின்றது. (பிரதிபேதம்)1மாட்சிமைய, 2வழுவலமைத்துத்தன், 3சொற்சீரடியும் பெற்று.
|