பக்கம் எண் :

மூன்றாவது மருதம்593

யுத்தி பொறித்த புனைபூண் பருமத்து
15முத்தேய்க்கும்வெண்ப னகைதிறந்து
நன்னகர் வாயிற் கதவ வெளில்சார்ந்து
தன்னலங் காட்டித் தகையினாற் காறட்டி வீழ்க்குந்
தொடர்தொட ராகவலந்து படர்செய்யு
மென்றோட் டடக்கையின்வாங்கித்தற் கண்டார்
20நலங்கவளங்கொள்ளு நகைமுக வேழத்தை
யின்றுகண் டாய்போ லெவனெம்மைப் பொய்ப்பதுநீ;
22எல்லா, கெழீஇத் தொடிசெறித்த தோளிணை தத்தித்
தழீஇக்கொண் டூர்ந்தாயு நீ;
24குழீஇ, அவாவினாற் றேம்புவா ரிறகடை யாறா
வுவாவணி யூர்ந்தாயு நீ;
26மிகாஅது, சீர்ப்பட வுண்ட சிறுகளி யேருண்க
ணீர்க்குவிட் டூர்ந்தாயு நீ;
28சார்ச்சார், நெறிதா ழிருங்கூந்த னின்பெண்டி ரெல்லாஞ்
சிறுபாக ராகச் சிரற்றாது மெல்ல
விடாஅது நீயெம்மில் வந்தாயவ் வியானை
கடாஅம் படுமிடத் தோம்பு.

இது “கொடியோர் கொடுமை சுடுமென................பகுதி யினீங்கிய தகுதிக்கண்” (1) தலைவி (2) பரத்தையரை யானையாகக் கூறிப் 1புலந்தது.

இதன் பொருள்.

(3)அன்னை கடுஞ்சொ லறியாதாய் போலநீ
2யென்னைப் புலப்பதொறுக்குவேன் மன்யான்
(4)சிறுகாலை யிற்கடைவந்து குறி 3செய்த

1. தொல். கற்பியல். சூ. 6.

2. இந்நூற்பக்கம் 577 : 2 - ஆம் குறிப்புப்பார்க்க.

3. “அன்னை கடுஞ்சொல்....................எள்ளல்” என்பது பரத்தையர் அன்பினாற் * கூடியதற்கு (* கூடியதற்கு என்றும் பிரதிபேதம்) மேற்கோள்; தொல். களவி. சூ. 156. இளம்.

4. (அ) “ஒருபாற் கிளவி யேனைப்பாற் கணும்” என்னுஞ் சூத்திரத்திற்கு, ‘ஒருபக்கத்துக் கூறிய பொருண்மை ஒழிந்த பக்கத்துக்

(பிரதிபேதம்) 1 புலாந்தது, 2 என்னைபுலப்பது, 3 செய்தவவழி யென்றுயான் காண.