வவ்வழி யென்றும்யான் காணேன் றிரிதர வெவ்வழிப் பட்டாய் சமனாக விவ்வெள்ளல் எ - து: நீ தலைநின்று ஒழுகுகின்ற பரத்தை, யான் புணர்தற்கு நீ குறித்தல்செய்த 1அவ்விடத்து எந்நாளும் உன்னைக் காணேனாய்ப் பலகாலுந் திரிதலைச் செய்ய, நீ எவ்விடத்தே போனாயென்று நாட்காலத்தே எம்முடைய மனையின் வாசலிலே வந்து கடுஞ்சொற் சொல்லி உன்னைப் புலக்கின்ற தொழிலை நீ அறியாதாய்போல இப்பொழுது நடுவாக நின்று இங்ஙனம் எம்மை இகழ்கின்ற இகழ்ச்சியிடத்து யான் என்னை மிகவும் ஒறுத்துக்கொள்வேன்; நீ எந்நாளும் அத்தன்மையையென்றாள் தலைவி. எ - று. 6 | (1)முத்தேர் முறுவலாய் நம் (2) வலைப் பட்டதோர் (3)புத்தியானைவந்தது 2காண்பான்யான் றங்கினேன் |
எ - து: அதுகேட்ட தலைவன், முத்தையொக்கும் முறுவலையுடையாய்! நம்வலையிலே அகப்பட்டுவந்த தொரு புத்தியானை ஈண்டு வந்தது; அதனை ஏறிக் 3காண்பதாக யான் தங்கினே னென்றான். எ - று.
கண்ணும் வருவகைதாம் வழக்கு நெறியென்று கூறுப’ என்று பொருளும் ‘மனையோண்மாட்டும் காமக்கிழத்திமாட்டும் நிகழும்புணர்ச்சியும் பிரிவும் ஊடலும் பரத்தையர் மாட்டும் நிகழும்’ என்று விளக்கமும் எழுதி, “சிறுகாலை...............காணேன்” என்ற பகுதியைப் புணர்வுகுறித்து வந்ததற்கு மேற்கோள் காட்டினர் இளம்; தொல். பொருளி. சூ. 26. (ஆ) “சிறுகாலைப் பட்ட பொறியும்” (இ) “சிறுகாலை, யட்டில் புகாதாள்” நாலடி. 110, 363. 1. (அ) தலைமகன், தனதொழுக்கத்தைத் தலைமகண்மாட்டுக் கரந்துணர்த்தும் வழி அவள் மடனழிய நின்றதற்கு, “முத்தேர் முறுவலாய் நம்வலை.............கேட்டேன்” என்னும் பகுதிகளை மேற்கோள் காட்டி, “முத்தேர்.....................தங்கினேன்” என்றவழி, அதற் குடம்படாது “அவ்வியானை வனப்பு........................கேட்டேன்” எனப் பொய்கூறினானென்னுங் கருத்தினளாகிக் கூறுதலின் மடனழித லாயிற் றென்பர் இளம்; தொல். பொருளி. சூ. 10, ‘தன்வயிற்’ (ஆ) “முத்தேர் முறுவலாய்” இந்நூற்பக்கம் 390 : 2 - ஆம் குறிப்புப்பார்க்க. 2. “மும்மதத்துவாவை, வலையை வீசியே பிடித்திட மதித்துளாரென்ன” 3. “காவற் பாங்கி னாங்கோர் பக்கமும்” என்புழி, “புத்தியானை வந்தது காண்பான் யான் றங்கினேன்” என்பதனால், யானையைக் காத்தற்குப் பிரிந்தேனெனத் தலைவன் கூறினானென்பர் நச்; தொல். அகத். சூ. 41. (பிரதிபேதம்)1 இடத்து, 2காணயான் றங்கினேன், 3காண்பதாயான்.
|