8 | ஒக்கும் (1)அவ்வியானை வனப்புடைத் தாகலுங் கேட்டேன் அவ்வியானைதான், சுண்ண(2) நீ றாடி (3) நறுநறா நீருண் டொண்ணுதல் யாத்த திலக வவி 1ரோடைத் (4)தொய்யில் பொறித்த வனமுலை வான்கோட்டுத் தொய்யகத் தோட்டிக் குழைதாழ் வடிமணி யுத்தி பொறித்த புனைபூண் பருமத்து | 15 | முத்தேய்க்கும் 2வெண்ப னகை திறந்து (5) நன்னகர் வாயிற் கதவ வெளில் 3சார்ந்து தன்னலங் காட்டித் தகையினாற் காறட்டி வீழ்க்குந் தொடர்தொட ராக 4வலந்துபடர்செய்யு மென்றோட் டடக்கையின்வாங்கித்தற் கண்டார் | 20 | நலங் 5கவளங் கொள்ளு நகைமுக வேழத்தை யின்றுகண் டாய்போ லெவனெம்மைப் பொய்ப்பதுநீ |
எ - து: அதுகேட்ட தலைவி, நீ கூறியது ஒக்குமென நெஞ்சொடு கூறி, பின்னர் அவன் கேட்ப 6அந்தப் புத்தியானை, ஒள்ளிய நெற்றியிலே நிலை பெறுத்தின (6) திலகமாகிய விளங்கிய = பட்டத்தினையும், தொய்யில் எழுதின
1. கலி. 98 : 13-ஆம் அடிக்குறிப்பின்க ணுள்ள அம்பிகாபதிகோவை. (510) செய்யுள், ஈண்டும் அறியத்தக்கது. 2. "நீறாடிய களிறுபோல" பட். 48. 3. "தெண்கட் டேறன் மாந்தி" அகம். 336 : 6. 4. "தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை" மது. 416. 5. நன்னகரென்பதனை இவ்வடியின் முன்னடிக்கும் தன்னலமென்பதனை இவ்வடிக்கும் ஈற்றுச்சீராக்கி இம்மூன்றடியையும் அளவடியாக்கலுமாம். 6. திலகமென்பது நெற்றியிலணியும் ஓரணிகலமுமாம்; இதனை (அ) "ஒருத்தி தெரிமுத்தஞ் சேர்ந்த திலகம், ஒருத்தி யரிமா ணவிர்குழை யாய்காதுவாங்க " (கலி. 92 : 35-36) என்பதனாலும் (ஆ) உதயனன் வாசவதத்தையின் அணிகளைக் கண்டு புலம்புமிடத்து, "அந்தியுண் முளைத்த வெண்பிறை போலச், செந்தீச் சிறுநுதன் மூழ்கத் தீந்து, நிலமிசை மருங்கின் வீழ்ந்தனை யோவெனத், திலக நோக்கிப் பலபாராட்டியும்" (பெருங். (2) 19 : 88 - 91.) என்று கூறுதலாலும் அறிய (பிரதிபேதம்)1ஓடை தொய்யில, 2வெண்பன்னகை, 3சாய்ந்து, சாய்த்து, 4வலர்ந்துபடர், 5கவழங்கொள்ளும், 6வந்தபுத்தியானை, வட்டத்தினையும்.
|