அழகினையுடையமுலையாகிய வெண்மையையுடைய கோட்டினையும், (1)தொய்யகமென்னுந் தலைக்கோலமாகிய தோட்டியினையும், தாழ்ந்த மகரக்குழையாகிய வடித்த மணிகளையும், திருவைப் பொறித்துவைத்த புனைந்த தலைப் பணியாகிய கழுத்துமெத்தையினையும் உடைத்து; ஆகையினாலே அழகுடைத்தாகலும் பிறர் கூறக் கேட்டேன்; அந்த யானைதான் சுண்ணமாகிய நீற்றை அணிந்து 1நறிய கள்ளாகிய நீரை உண்டு நல்ல மனைவாசலிற் கதவமாகிய கம்பத்தைச் சேர்ந்து அதனோடே துவக்குண்டதே தனக்குச் சங்கிலியாகக் கட்டுண்டு தன்னழகைக் காட்டி அவ்வழகாலே ஒருவரும் போகாதபடி காலைத் தடுத்து வீழ்க்கும்; அதுவேயுமன்றிப் பிறர்க்கு வருத்தத்தைச் செய்யும் மெல்லிய தோளாகிய தடக்கையாலே வாங்கிக்கொண்டு தன்னைக் கண்டாருடைய நலமாகிய கவளத்தை முத்தையொக்கும் நகையினையுடைய வெண்பல்லைத் திறந்து கொள்ளும்; அந்தச் சிரிப்பை 2முகத்தேயுடைய வேழத்தை இன்று கண்டாய் போலே நீ எம்மைப் பொய்யாக்குவது என்ன 3பயனையுடைத்தென்றாள். எ-று. "பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்து" (2) என்றார் பிறரும், ஆடியென்பது முதலிய செய்தெனெச்சங்கள் வீழ்க்குமென்னும் முற்றுச் சொல்லோடு 4முடிந்தன. அதுவேயுமன்றிக் கவளமுங் கொள்ளுமெனப் பின்னும் முற்றாக முடிக்க, 5நகைமுகவேழமென்றது சுட்டாய் நின்றது. 22 | எல்லா, கெழீஇத் தொடிசெறித்த 6தோளிணைதத்தித் தழீஇக்கொண் டூர்ந்தாயு நீ |
எ - து: ஏடா ! 7தொடியைச் செறித்த தோளாகிய மருமத்தே கெழுமித் தழுவிக்கொண்டு பின்னர்த் தத்தி ஏறினாயும் நீ எ - று. இது முயக்கமும் புணர்ச்சியுங் கூறிற்று. யானையாதலின், தத்தியூர்ந்தாயென்றாள். 24 | குழீஇ, அவாவினாற் றேம்புவா ரிற்கடை யாறா வுவாவணியூர்ந்தாயு நீ |
லாகும். (இ) "சிந்தூரத் திலகநுதற் சிந்துரத்தின்" (ஈ) "தாரா ரோடைத் திலகநுதற் சயிலம்" வில்லி. கிருட்டினன். 11. நான்காம்போர். 32. என்புழி யானை நெற்றியிலும் திலகம் கூறப்படுகின்றது. 1. "தொய்யகம்" கலி. 28 :6. இதற்கு, பூரப்பாளை யென்று பொருள் கூறுவர் அடியார்க்கு நல்லார்; சிலப். 6: 107. 2. களவழி. 38. (பிரதிபேதம்)1நறிதாகிய, 2முகத்தையுடைய, 3 பயனுடைத்து, 4முடியும் அதுவேயுமன்றிக் கவழமும், 5நகைவேழமென்றது, 6தோளிணைத் தத்தித்தழீஇக், 7தொடிசிறந்ததோள்.
|