எ - து: நின்மேல் வேட்கையால் எதிர் கொண்டுவந்து கூடிப் பின்னர் வருந்துகின்ற பரத்தையருடைய மனையின் வாயிலே வழியாகக் கொண்டு போய் அவ்வியானையை அழகுண்டாக ஏறினாயும் நீ. எ - று. உவாவென்றதனை இளையமகளிராகவும் யானையாகவுங் கூறுக. அது யுகம் உகமாயினாற்போல் நின்றது. 26 | மிகாஅது, சீர்ப்பட வுண்ட சிறுகளி யேருண்க ணீர்க்குவிட்டூர்ந்தாயு நீ |
எ - து: நின்னை மிகாமற் 1சீர்மைப்பட நுகர்ந்த சிறிய களிப்பினையுடைய அழகினையுடையவாகிய மையுண் 2கண் அழும்படி சிலநாள் விட்டுப் பின்னர்க் கூடினாயும் நீ. எ - று. நின்னைக் கைகடவாமல் ஓர் அளவிற்பட மதம் பிறத்தற்கு வேண்டுவனவற்றை உண்ட, சிறிய களிப்பையுடைய, மக்க ளழகை உண்டற்குக் காரணமான கண்ணையுடைய (1)யானையை நீர்க்கு விட்டு ஏறினாய் நீ என்றும் ஒரு பொருள் தோன்றநின்றது. அழகையுண்டல்-அவரைக் கொல்லுதல், கண், ஆகுபெயர். 28 | 3சார்ச்சார், (2)நெறிதா ழிருங்கூந்தனின்பெண்டி ரெல்லாஞ் சிறுபாக ராகச் (3) சிரற்றாது 4மெல்ல |
1. "நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப், பறையறைந் தல்லது செல்லற்க" கலி. 56 : 32 - 3, என்பதும் இந்நூற்பக்கம் 346 : 4-ஆம் குறிப்பும் இங்கே கருதத்தக்கன. 2. (அ) எல்லாமென்னுஞ்சொல் உயர்திணைக்கண் உளப்பாட்டுத் தன்மைக்கே வருமென்றும் அது "நெறிதா ழிருங்கூந்த னின்பெண்டி ரெல்லாம்" எனப் படர்க்கையின் வருதல் இலக்கணவழக்கன்று; நின் பெண்டிரெல்லாரு மென்னுஞ்சொல் எல்லாமென மரூஉவழக்காகி வந்த தென்றும் அதனைச் செய்யுண்மருங்கினுமென்னும் அதிகாரப்புறநடையாற் பிறநூன் முடிபெனத் தழீஇக் கோடலுமா மென்றும் கூறுவர் தெய்வச்சிலையார்; தொல். பெயரி. சூ. 32. ‘எல்லாமென்னும்' (ஆ) எல்லா மென்பது "தன்னுளுறுத்த பன்மைக்கல்லது உயர்திணை மருங்கினாக்கமில்லை" என்பதனால், சிறுபான்மை முன்னிலைக் கண்ணும் படர்க்கைக்கண்ணும் வருமென்றுகொண்டு, "நெறிதா ழிருங்கூந்தனின்பெண்டி ரெல்லாஞ், சிறுபாகராக" என்பதனைப் படர்க்கைக்கண் வந்ததற்கு (தொல்.பெயரி. சூ. 33.) நச்சினார்க்கினியரும், (இ) இ-வி. சூ. 191. இ-வி. நூலாரும் மேற்கோள் காட்டுவர்; (ஈ) இதனை, சேனாவரையர் இடவழு வமைதியென்பர்; தொல்.பெயரி. சூ. 33. 3. சிரற்றுதலென்பது சிரறுதலென்றும்வரும்; உடற்றுதல் உடறுதலென அருகிவருதலும் காண்க. (பிரதிபேதம்)1சீர்மைபட, 2கண்ணை அழும்படி, 3சாஅர்ச் சாஅர், 4மெல்லாலிடா.
|