பக்கம் எண் :

மூன்றாவது மருதம்599

கார்மலர் வேய்ந்த கமழ்பூம் பரப்பாக
நாணுச் சிறையழித்து நன்பகல் வந்தவிவ்
வியாணர்ப் புதுப்புன லாடினாய் முன்மாலைப்
பாணன் புணையாகப் புக்கு;
20ஆனாது, அளித்தமர் காதலோ டப்புன லாடி
வெளிப்படு கவ்வையை யானறித லஞ்சிக்
குளித்தொழுகி னாயெனவுங் கேட்டேன் குளித்தாங்கே
போர்த்த சினத்தாற் புருவத் திரையிடா
வார்க்கு ஞெகிழத்தா னன்னீர் நடைதட்பச்
சீர்த்தக வந்த புதுப்புன னின்னைக்கொண்
டீர்த்துய்ப்பக் கண்டா ருளர்;
27ஈர்த்தது, உரைசால் சிறப்பினின் னீருள்ளம் வாங்கப்
புரைதீர் புதுப்புனல் வெள்ளத்தி னின்னுங்
கரைகண் டதுஉ மிலை;
30நிரைதொடீஇ, பொய்யாவாட்டானைப் புனைகழற்காற்றென்னவன்
வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்ததைத்
தெய்வத்திற் றேற்றித் தெளிப்பேன் பெரிதென்னைச்
செய்யா மொழிவ தெவன்;
34மெய்யதை, மல்கு மலர்வேய்ந்த மாயப் புதுப்புனல்
பல்காலு மாடிய செல்வுழி யொல்கிக்
களைஞரு மில்வழிக் காலாழ்ந்து தேரோ
டிளமண லுட்பட லோம்பு முளைநேர்
முறுவலார்க் கோர்நகை செய்து.

இது பரத்தையிற்பிரிந்துவந்த தலைவன் ஆற்றாமையே வாயிலாகச் சென்றுழி அவனைக் கண்டு நீ தாழ்த்த காரணமென்னென, புதுப்புனலாடித் 1தாழ்த்ததென்ன, தலைவி இன்ன புதுப்புனலே ஆடியதென நெருங்கிக் கூறியது.

இதன் பொருள்.

(1) 2யாரைநீ யெம்மில் புகுதர்வா யோரும்
புதுவமலர்தேரும் வண்டேபோல் யாழ

1. (அ) "யாரைநீ யெம்மில் புகுதர்வாய்" என்பது தலைவி அகமலி யூட லகற்சிக்கண் வேற்றுக்கிளவி கூறியதற்கு மேற்கோள்; தொல். கற்பி.

(பிரதிபேதம்)1தாழ்த்தேனெனத்தலைவி நீ யின்னபுதுப்புனலோவாடியது, 2யாரையோ வெம்மில்.