| (1)வதுவை விழவணி வைகலுங் காட்டினையாய் மாட்டுமாட் டோடி (2)மகளிர்த் தரத்தரப் | | 5 பூட்டுமான் றிண்டேர் புடைத்த மறுகெல்லாம் பாட்டாதல் சான்றநின் மாயப் 1பரத்தைமை (3)காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டெலாங் கேட்டு மறிவேன்மன் யான் |
2எ -து: (4) புதியனவாகியமலர்களை ஆராய்ந்து நுகரும்வண்டுபோலே நீ புதிய பரத்தையரை நுகர்தற்கு விரும்புதலின் அவரைக் கொண்டுவருதற்கு அவரிருக்கின்ற இடந்தோறும் இடந்தோறும் ஓடிச் சென்று அப்பரத்தையரைக் கொண்டுவருகையினாலே எப்பொழுதும் பூட்டப்படுங் குதிரையை
சூ. 16. ‘அவன் குறிப்பு' இளம். (ஆ) "யாரைநீ சொல்லுகென்றலும்" (இ) "யாரைநீ தேற்றேன்" கந்த. மார்க்கண்ட. 218. அசுரர்யாக. 27. (ஈ) "நீயாரை நின்னிலை, சொல்லுதி" (உ) "யாரைநீ, யென்னைநீ யியம்பியது" கம்ப. விபீடண. 53. மீட்சி. 90. (ஊ) "யாரைநீ செப்புகென" (எ) "ஆரைநீயென" கூர்ம. இராமன்வனம். 36, 107. (ஏ) "யாரைநீ.......................போந்ததென்னை" நைடதம். பிரிவுறு. 26. என்பவற்றிலும் (ஐ) " நீயாரை" கலி. 88: 3: என்பதிலும் அதன் குறிப்பிலுள்ளவற்றிலும் யாரை என்பதில் ஐகாரம் முன்னிலை விளக்கிவருதல் காண்க; ஐ, அசையென்பாரு முளர். 1. "அறிவுடை யந்தண னவளைக்காட் டென்றானோ" கலி. 42 : 18. 2. (அ) "இவ்வூர் மங்கையர்த் தொகுத்தினி, யெவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் றேரே" ஐங். 62. (ஆ) "நல்லாரை நெடுநகர்த் தந்துநின், றேர்பூண்ட நெடுநன்மான் றெண்மணிவந் தெடுப்புமே" (இ) "தேர் மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார்" கலி. 70 : 17-18, 88 : 18. (ஈ) "தேர்தர வந்த நேரிழை மகளிர்" அகம். 336 : 11. 3. "செவியிற் கேட்பினுஞ் சொல்லிறந்து வெகுள்வோள், கண்ணிற் காணி னென்னா குவள்கொல்................பலர்படிந் துண்ணுநின் பரத்தை மார்பே" ஐங்குறு. 84. 4. (அ) "வண்டு புதிதுண்ண" கலி. 17. என்பதும் (ஆ) அதன் குறிப்பும் இந்நூற்பக்கம் 234: 4-ஆம் குறிப்பில் (இ) இச்செய்திக்குப் பொருந்துவனவும், (ஈ) "தேனீப் புதுநறா வருந்தி யார்த்து" கந்த. சுரம்புகு. 28. (உ) "பூந்துகள் விரவித் தோற்றாப் புதுமதுக் கவர்ந்து தேனீ, மாந்துதன் மாந்தி" திருவானைக். ஆரஞ். 16. என்பனவும் இங்கே ஒப்புநோக்கற் பாலன. (பிரதிபேதம்)1பரத்தமை, 2 எ - து: ஒருமசை, புதியன.
|