13 | ஓஒ! என, கூறிய பொய்யை வியந்து நெஞ்சோடு கூறினாள். புனலாடி னாயெனவுங் கேட்டேன் (1) புனலாங்கே நீணீர் நெறி (2) கதுப்பு வாரு மறலாக மாணெழி லுண்கண் பிறழுங் கயலாகக் கார்மலர் வேய்ந்த கமழ்பூம் பரப்பாக நாணுச் சிறை 1யழித்து (3) நன்பகல் 2வந்தவவ் வியாணர்ப் புதுப்புன லாடினாய் (4)முன்மாலைப் பாணன் புணையாகப் புக்கு |
எ - து: அவ்விடத்தே புனலாடினா 3யென்றுங் கேட்டேன்; நீ ஆடிய புனல்தான் ஒழுகும் அறல் நீண்ட தன்மையையுடைய நெறித்த மயிராக, ஆண்டுப் பிறழுங் கயல்கள் மாட்சிமைப்பட்ட அழகினையுடைய உண்கண்ணாக, 4கருமை மலர்தல் பொருந்தின கமழ்கின்ற பூக்களையுடைய சோலையிடத்தே நாணாகிய அணையை முறித்துப் பலருங் காணும்படி பகற்பொழுதிலே 5வந்த அந்தப் புதுவருவாயையுடைய புதுப்புனலைப் பாணன்வாயிலாக ஊட 6றீர்த்து மாலைக்காலத்திற்கு முன்னே சென்று ஆடினாயென்றாள். எ - று. மலர்தல், பரத்தற்பொருட்டு7.
என்பதற்கு, காப்பாயாகவென்று பொருள் கூறி வேண்டுமென்பது உம்மீற்றான்வந்ததோர் ஏவல்கண்ணிய வியங்கோள்; "வாழ்தல்வேண்டு மிவண் வரைந்த வைகல்" (புறம். 367) என்றார் பிறரும் என்று மேற்கோள்காட்டியிருப்பதும் "நடக்கல் வேண்டும்" (சீவக. 267.) என்பதற்கு, போவாயாகவென்று பொருள் கூறிவேண்டுமென்பது ஒரு வியங்கோளென்று எழுதியிருப்பதும் ஈண்டு அறிதற்பாலன. 1. "தேனுகர் வண்டு ஞிமிறுஞ் சுரும்புஞ் செறிகுவளைப், பூநகு தண்புனற் பொய்கைநல் லுார புதுப் புனலுங், கானமர் புள்ளுங் கடவுளும் வாசியும் காய்சினமால், யானையு மாவர்கொல் லோநாளு நாளும்வந் தெங்கையரே" அம்பிகாபதி. 510. 2. "விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கய னெடுங்கண், விரைமலர் நீங்கா வவிரறற் கூந்த, லுலகுபுரந் தூட்டு முயர்பே ரொழுக்கத்துப், புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி, வையை யென்ற பொய்யாக் குலக்கொடி" சிலப். 13 : 166 - 170. 3. இந்நூற்பக்கம் 445 : 2 -ஆம் குறிப்புப் பார்க்க. 4. முன்மாலையென்பது இரவின் முன்னதாகிய அந்திக்கும் பின்மாலை யென்பது இரவின் பின்னதாகிய அந்திக்கும் பெயராகுமென்றும்கூறுவர். (பிரதிபேதம்)1அழிந்து, 2வந்தவிவ்வியாணர்ப், 3என்று கேட்டேன், 4 கருமையலர்தல், 5வந்த புதுவருவாயை, 6தீர்ந்து, 7(‘புதுவருவாயையுடையது புதுப்புனல்’ என்பது முன் பதிப்பு.)
|