பக்கம் எண் :

மூன்றாவது மருதம்603

20ஆனாது, அளித்தமர் காதலோ டப்புன லாடி
வெளிப்படு கவ்வையை யானறித லஞ்சிக்
(1)குளித்தொழுகி னாயெனவுங் கேட்டேன் குளித்தாங்கே
போர்த்த சினத்தாற் புருவத் திரையிடா
வார்க்கு ஞெகிழத்தா னன்னீர் நடைதட்பச்
சீர்த்தக வந்த புதுப்புன னின்னைக்கொண்
டீர்த்துய்ப்பக் கண்டா ருளர்

எ - து: மேன்மேலே தலையளிசெய்து அமர்ந்த காதலோடே அப்புனலை ஆடுதலால் வெளிப்படுகின்ற அலரை யான் அறிதலை அஞ்சி மறைந்து நடந்தாயென்று பிறர் சொல்லவுங் கேட்டேன்; அதுபொறாமல் மெய்யை மறைத்த சினத்தோடே புருவமாகிய 1திரையையிட்டு நல்ல நீர்மையையுடைய நின் ஒழுக்கத்தைத் தடுக்கும்படி கனம்பட வந்த சிலம்பொலியாலே ஆரவாரிக்கும் புதியபுனல் நீ குளித்த அவ்விடத்தே நின்னைக் கைக்கொண்டு இழுத்துச் செலுத்தக் கண்டாரும் உளரென்றாள். எ - று.

குளித்த கடைக்குறைந்தது. குறித்தொழுகவென்று நீரிற் பிறக்குந் தொழிலுந் தோன்றநின்றது. கோபத்தாற் பல்காலும் புருவம் ஏறி முரிவதனைத் 2திரையிடாவென்றாள். ஒழுகினாயெனவுமென்ற உம்மை, எச்சவும்மை. பாணன் புணையாக ஆடியதே 3யன்றி யென நிற்ற லின்.

27 ஈர்த்தது, (2)உரைசால் சிறப்பினின் னீருள்ளம் வாங்கப்
புரைதீர் புதுப்புனல் வெள்ளத்தி னின்னுங்
கரைகண் டதூஉ மிலை

எ - து : அங்ஙனம் இழுத்த நீர் புகழமைந்த தலைமையினையுடைய நினது நீர்மையையுடைய நெஞ்சை வாங்கிக்கொள்கையினாலே குற்றமற்ற அப்புதுப்புனலினுடைய பெருக்கினின்றுங் கரையேறுதற்கு இன்னும் கரை கண்டதுதானும் 4இல்லையென்றாள். எ - று.

இன்னுமென்ற உம்மை, சிறப்பு. கண்டதுமென்ற உம்மை, காணாமையேயன்றிக் கண்டதுமில்லையென எதிர்மறை.

30 நிரைதொடீஇ,(3)பொய்யாவாட்டானைப் புனைகழற்காற்றென்னவன்
வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்ததைத்


1. குளித்தல் - மறைதல். "மயின்மயிற் குளிக்குஞ்சாயல்" சிறுபாண். 16.

2. "உரைசால் சிறப்பின், மன்னன் மாரன்" சிலப். 8 : 5-6.

3. இப்பொருளில், "வாய்வாள்" என்ற சொல்லாட்சியே பெரும்பாலன.

(பிரதிபேதம்) 1 திரையைவிட்டு, 2 திரையிடவென்றாள் ஓழுகினாயென்றவும்மை, 3அன்றி நிற்றலின், 4இலையென்றாள்.