பக்கம் எண் :

604கலித்தொகை

(1)தெய்வத்திற் றேற்றித் தெளிப்பேன் பெரிதென்னைச்
செய்யா மொழிவ தெவன்

எ - து: அதுகேட்ட தலைவன், 1நிரைதொடியினையுடையாய்! (2) தப்பாத வாட்டானையினையும் புனைந்த கழற்காலினையுமுடைய பாண்டியனது வையை யாற்றின் வந்த புதிய புனலை ஆடுதற்குத் தங்கினபடியை வார்த்தையாற் றெளிவித்து, பின்னர்த் தெய்வத்தாற் றெளிவிப்பேன் ; நினக்கு யான் செய்யாதனவற்றை என்னைப் பெரிதாகச் சொல்லுகின்றது என்னபயன்தருமென்றான். எ - று.

இந்நிலத்திற்கு உரியதெய்வம் (3) இந்திரன்.

34(4)மெய்யதை, 2மல்கு மலர்வேய்ந்த மாயப் புதுப்புனல்
பல்காலு மாடிய செல்வுழி யொல்கிக்
களைஞரு மில்வழிக் காலாழ்ந்து தேரோ
டிளமண லுட்பட லோம்பு முளைநேர்
முறுவலார்க் கோர்நகை செய்து

எ - து: 3பெருகிய மலரைச் சூடின பொய்யையுடைய புதிய புனலைப் பலகாலும் ஆடல்வேண்டித் தேரோடேசெல்லுமிடத்து (5) முளையொத்த முறுவலையுடையார்க்கு ஒரு சிரிப்பை உண்டாக்கி நின்னைப் பிடித்துக் கரையேற விடுவாரில்லாதகாலத்தே இளமணலினுள்ளே 4கால்நிலை தளர்ந்து கழுமி அகப்படுதலைப் பாதுகாப்பாயாகெனத் தலைவி நெருங்கிக்கூறினாள். எ - று.


1. "செய்யாத சொல்லிச் சினவுவ தீங்கெவ, னையத்தா லென்னைக் கதியாதி தீதின்மை, தெய்வத்தாற் கண்டீ தெளிக்கு" கலி. 91 : 6 - 8.

2. தப்பாத வாள் தானை - தவறாமல் வெட்டுகின்ற வாட்படை.

3. "ஊடலுங் கூடலுமாகிய காமச்சிறப்பு நிகழ்தற்கு,மருத நிலத்திற்குத் தெய்வமாக ‘ஆடலும் பாடலு மூடலு முணர்தலும்’ உள்ளிட்ட இன்ப விளையாட்டு இனிதினுகரும் இமையோர்க்கும் இன்குர லெழிலிக்கும் இறைவனாகிய இந்திரனை ஆண்டையோர் விழவுசெய்து அழைத்தலின் அவன் வெளிப்படு மென்றார். அது ‘வையைப் புதுப்புன.............தேற்றித் தெளிக்கு’ என இந்திரனைத் தெய்வ மென்றதனாலும்................உணர்க" தொல். அகத். சூ. 5. நச்.

4. மெய்யதையென்பதற்கு, உரை காணப்படவில்லை.

5. நாணன் முளையை மகளிர்பல்லுக்கு உவமைகூறுதல் தமிழ்நூன் மரபு; "கிளையரி நாணற் கிழங்கு மணற் கீன்ற, முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்" (அகம். 212 : 4 - 5.) என வருதல்காண்க.

(பிரதிபேதம்)1நிரைத்த தொடியினை, 2மல்கிமலர்வேய்ந்த, 3பெருகுமலரை. 4தான்நிலை தளர்ந்து கழுமி அகப்படுத்துதலைப் பாதுகாப்பார்யாரென.