பக்கம் எண் :

606கலித்தொகை

(2)

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கு மவையெடுத்
தறவினை யின்புறூஉ மந்தண ரிருவருந்
திறம்வேறு செய்தியி னூனெறி பிழையாது
குழவியைப் பார்த்துறூஉந் தாய்போ லுலகத்து
மழைசுரந் தளித்தோம்பு (1) நல்லூழி யாவர்க்கும்
பிழையாது 1வருதனின் செம்மையிற் றரவாய்ந்த
விழையணி கொடித்திண்டே ரினமணி யானையாய்

எ - து: கள்ளை உண்ணல் ஆகாதென்று நீக்கின 2தேவர்க்கும் அதனை உண்டலை நீக்காத அசுரர்க்கும் (3) வரைதலும் வரையாமையுமாகிய அவ்விரண்டினையுங் கைக்கொண்டு அறத்தொழிலாக இன்பமுறுத்தும் வியாழமும் வெள்ளியுமாகிய 3குரு இருவருஞ் செய்த வழி வேறாகிய தொழில்களையுடைய


1. (அ) மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்க......................நல்லூழி யடிப் படரப், பல்வெள்ள மீக்கூற, வுலக மாண்ட வுயர்ந்தோர் மருக" மது. 10 - 23. (ஆ) "உரவிப் பெருங்கலித் துன்பங்கள் போய்முத லூழி யின்பம்,
வரவிப்படிதன்னை வாழ்வித்தவாணன்" தஞ்சை. 286. என்பவை "நல்லூழி......................யானையாய்" என்பதனோடு ஒப்புநோக்கற்பாலன.

2. (அ) "இழையணிந் தியல்வருங் கொடிஞ்சி நெடுந்தேர்" குறுந். 345. (ஆ) "இழையணி நெடுந்தேர்"
(இ) "இழைகிளர் நெடுந்தேர்" புறம். 123 : 4. 359 : 15.

3. வியாழமும் வெள்ளியுஞ் செய்த அரசியனூல்கள் முறையே பாருகற் பத்திய சூத்திரமென்றும் சுக்கிரநீதியென்றும் பெயர்பெறும்; கள்ளுண்டல் பல நூல்களிலும் விலக்கப்பட்டுள்ள தென்பது உலகமறிந்த தொன்று; பிறவற்றாற் றீராப் பிணிதீர வேண்டி, நறவைத்தா னுண்டாற்கு நற்றீர் - வுறவைத்தான், பண்டுபொன்னோன் றத்த பராகசாந் தாயணப் பேர், கொண்ட கிருச்சிரங்கள் கொண்டு இதனால் வியாழத் துக்கும் கொள்கை அதுவாதல் புலனாகும். சுக்கிரநீதியில் அளவு கடவாத மத்தியபானம் பிரதிபையையும் புத்தித்தெளிவையும் தைரியத்தையும் சித்தநிச்சயத்தையும் உண்டாக்குமென்று கூறப்பெற்றிருக்கிறது; வேறு விளக்கமாக அந்நூலிற் கண்டாலும் உசனஸ்மிருதியிற் கண்டாலும் பின்பு அச்செய்தி குறிக்கப்பெறும்; யாக்கிய வற்கியர் மத்தியபான சுராபான நிஷேதம் அந்தணர்க்கே யென்றும் அரசர் முதலியோர்க்கன்றென்றும் மக்கட்பிரிவுக்கு வகுத்துக் கூறியுள்ளார். அஷ்டாங்க ஹ்ருதயம் சிகித்ஸாஸ்தானம் ஏழாவது அத்தியாயத்தில் நறவின் சிறப்பும் அதன் வகையின் பெயர்களும் பயனும் மற்றும் பலவும் விரித்துரைக்கப்பட்டிருத்தல் இங்கே அறியத்தக்கது.

(பிரதிபேதம்)1வருந்தநின், 2தேவர்களுக்கும், 3அந்தணரிருவரும்.