அரசியலைக் கூறும் நூல்வழியைத் தப்பாமல், குழவியைப் பார்த்துஇன்புறூஉந் தாய் (1) அதற்கு முலைசுரந்து கொடுக்குமாறுபோல, (2) மழையானது தன்னை (3) வேண்டின காலத்தே பெய்து (4) உலகை அளித்துப் பாதுகாக்கும் நல்ல முறைமையை எல்லார்க்குந் தப்பாது வருதலை நினது நடுவுநிலைமை
"வெள்ளியும் பொன்னு மென்போர் விதிமுறை மெய்யிற் கொண்ட, வொள்ளிய நாளி னல்ல வோரையி னுலகமூன்றுந், துள்ளினர் குனிப்ப மௌலி சூடினான் கடலில் வந்த, தெள்ளிய திருவுந் தெய்வப் பூமியுஞ் சேருந் தோளான்" கம்ப. திருவபிடேக. 38. என்பதும் இவ்விருவரும் அரசியனூல் செய்தன ரென்பதனை வலியுறுத்தும். 1. (அ) "புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போலச், சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர், மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன்" புறம். 68 : 8 - 10. (ஆ) "சரயு வென்பது தாய் முலை யன்னதிவ், வுரவு நீர்நிலத் தோங்கு முயிர்க்கெலாம்" கம்ப. ஆற்று. 12. (இ) "ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித், தீம்பால் சுரப்போ டன்முலை போன்றே, ......................... அவர், முகங்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்" மணி. 11 : 114 - 118. என, பிறவற்றுக்கும் உவமையாய் கூறப்பட்டுள்ளது. 2. (அ) "வேந்தன் முறைநெறியிற் சேர்தலும்..........................திங்கண்மும் மாரிக்கு வித்து" திரிகடுகம். 98. (ஆ) "இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட, பெயலும் விளையுளுந் தொக்கு" குறள். 545. (இ) "மழைவளஞ் சுரக்கு மாறும் வயனிலம் விளையு மாறும், ................................... பிறழ்தராக் கோலி னாகும்" விநாயக. அரசியற்கைப். 89. என்பனவும் (ஈ) "முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி, யொல்லாது வானம் பெயல்" குறள். 559. (உ) "கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியுங், கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்" மணி. 7 : 8 - 9. (ஊ) "செங்கோல் கோடியோ..........................நலத்தகை நல்லாய் நன்னா டெல்லா, மலத்தற்காலை யாகியதறியேன்" மணி. 28 : 188 - 191. (எ) "நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப், .................................. வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்" சீவக. 255. (ஏ) "வேந்தன் முறைதிறம்பின்................மாந்தர் பசியா லுணங்க மழைவறந்து, பாந்தண் முடிகிடந்த பாரின்விளை வஃகு மால்" பிரமோத்தர. பத்திராயுவுக்கு. 18. என்பனவும் இங்கே ஒப்பு நோக்கற்பாலன. 3. "முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண், டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே" புறம். 35 : 15 - 16. 4. "மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட, தண்ணிய லெழிலி" பதிற்: 18 : 9 - 10.
|